March 3, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

நெல்லை பேராசிரியர் அறிவரசன் காலமானார்

திருநெல்வேலி மாவட்டத்தில் மிகவும் பிரபலமானவரும் தமிழறிஞரும் விடுதலைப்புலிகள் பிரபாகரன் அவர்களுக்கு மிகவும் நெருக்கமானவரும் ஓய்வு பெற்ற பேராசிரியர் அறிவரசன் இன்று அவரது இல்லத்தில் காலமானார் இவர் தற்போதைய தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி ஸ்ரீபரமகல்யாணி கல்லூரியின் ஓய்வு பெற்ற பேராசிரியர் அறிவரசன் என்ற மு.செ.குமாரசாமி (81) ஆழ்வார்குறிச்சி ஸ்ரீபரமகல்யாணி கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றியவர்,


இவர் “புத்தன் பேசுகிறான்’ என்ற கவிதைத் தொகுப்பை வெளியிட்டுள்ளார்.
“மாமனிதர் திருவேங்கடம் வேலுப்பிள்ளை’, “தமிழ் அறிவோம்’, “தமிழ்ப் பெயர்க் கையேடு’, “இவர்தாம் பெரியார்’, “சோதிடப் புரட்டு’,”யார் இந்த ராமன்’ உள்ளிட்ட நூல்களையும் எழுதியுள்ளார்.
விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் அழைப்பை ஏற்று அறிவரசன் என்ற மு.செ.குமாரசாமி 2006 முதல் 2008 வரை ஈழத்தில் தங்கியிருந்து மாணவர்களுக்கு தமிழ் கற்பித்தார்.அந்த அனுபவங்களை “ஈழத்தில் வாழ்ந்தேன் இரண்டாண்டுகள்’ என்ற பெயரில் நூலாக எழுதியுள்ளார்.
“விடுதலைபுரம்’ என்ற காப்பியத்தையும் இயற்றியுள்ளார்.தமிழர் தாயகம் மாதம் ஒரு முறை இதழ் ஆசிரியர் .கடந்த மாதம் கூட இதழ் எனக்கு வந்தது. இலண்டன், இத்தாலி, கனடா, ஸ்விட்சர்லாந்து, ஆஸ்திரேலியா, நார்வே உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்று அங்குள்ள தமிழ் ஆசிரியர்களுக்கு தமிழ் கற்பித்துள்ளார்.
பாளையங்கோட்டை சைவ சபையில் தொடர்ச்சியாக இலக்கண வகுப்பு எடுத்து வந்தார்.
இவருக்கு பகுத்தறிவாளர் கழகம் “தமிழிசை பாவாணர்’ என்ற பட்டத்தையும், கடையம் திருவள்ளுவர் கழகம் “பைந்தமிழ் பகலவன்’ என்ற பட்டத்தையும் வழங்கி கௌரவித்துள்ளன.
கல்லூரி, பல்கலைக்கழக நிர்வாகங்களால் அலைக்கழிக்கப்பட்டு,தண்டனை மாறுதல் காரணமாக 1984- 85 களில் நான் பயின்ற தேவர் கல்லூரியில் பேராசிரியர் ஆகப் பணி ஆற்றினார்.
அப்போது,சங்கரன்கோவில், புளியங்குடி பகுதிநிகழ்ச்சிகளுக்கு என்னை உடன் அழைத்துச் செல்வார்.
இவரது பூர்விக ஊர் சிவகிரி வட்டத்தில் உள்ள இராயகிரி ஆகும்.இவருக்கு ஞானத்தாய் என்ற மனைவியும்,
முத்துசெல்வி, தமிழ்செல்வி ஆகிய இரு மகள்களும்,செல்வநம்பி,அழகியநம்பிஆகிய இரு மகன்களும் உள்ளனர். இவருடைய உடல் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வியாழக்கிழமை தானமாக வழங்கப்படுகிறது.

About Author

error: Content is protected !!