February 24, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

நெல்லை -பொங்கல் விழா பாமக வினர் கொடியேற்றி இனிப்பு வழங்கினர்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நெல்லை மாவட்டத்தில்  பல இடங்களில் பாட்டாளி மக்கள் கட்சியின், கட்சி கொடியேற்றி பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
தமிழகத்தில் இன்று பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கலை முன்னிட்டு பாட்டாளி மக்கள் கட்சியினர் பல இடங்களில் கட்சி கொடியேற்றும் நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக நெல்லை மாவட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியினரும் மாவட்டத்தின் பல இடங்களில் கட்சி கொடியேற்றி பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.


தென்காசி அருகே உள்ள இலஞ்சி, இலத்தூர், வடகரை, செங்கோட்டை சுற்று வட்டார பகுதிகளில் கொடியேறறி இனிப்புகள் வழங்கினர். இலஞ்சியில் மாநில இளைஞர் அணி துணை செயலாளர்  சாகுல்ஹமீது கொடியேற்றினார்.  இந்த கொடியேற்ற நிகழ்ச்சிக்கு மாநில துணை பொதுச்செயலாளர்; இசக்கிமுத்து தலைமை தாங்கினார்.  மாநில துணைத்தலைவர்  அய்யம்பெருமாள், மாவட்ட செயலாளர்  சீதாராமன், மாவட்டத்தலைவர்  குலாம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் தென்காச நகர செயலாளர் சங்கர் அழகப்பன், திருமலைக்குமார் பழனிச்சாமி, ஆவுடையப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

About Author

error: Content is protected !!