May 18, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

நெல்லை அதிமுக எம்.பி.,வேட்பாளர் மனோஜ்பாண்டியன் கீழப்பாவூரில் தேர்தல் பரப்புரை

நெல்லை நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் மனோஜ்பாண்டியன் கீழப்பாவூரில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
கீழப்பாவூர் அம்மன் கோவில் மைதானத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசுகையில், 2001ம் ஆண்டு கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் இந்த பகுதிக்கு குடிநீர் வழங்கியது அதிமுக ஆட்சி தான். மேலும் நாடாளுமன்ற தேர்தலில் என்னை வெற்றி பெற செய்தால் பிரபாகரன் எம்பி கீழப்பாவூரில் எண்ணற்ற திட்டங்களை அமைத்து கொடுத்து இருக்கிறார். இன்னும் எஞ்சிய பணிகள் கீழப்பாவூர் பேரூராட்சியில் இருந்தால் என்னுடைய நிதிகளை ஒதுக்கி அந்தப் பணிகளை செய்து தருவேன் என்று பேசினார்.
தேர்தல் பிரசாரத்தில் அவருடன் மாவட்டச் செயலாளரும் எம்.பி.,யுமான கே.ஆர்.பி. பிரபாகரன், முன்னாள் எம்.எல்.ஏ பி.ஜி.ராஜேந்திரன், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் சேர்மபாண்டி பெத்தநாடார்பட்டி ஊராட்சி முன்னாள் தலைவர் ராதா, அதிமுக நகரச் செயலாளர் ஜெயராமன்,ஒன்றிய செயலாளர் அமல்ராஜ், அட்மா சேர்மன் கணபதி, தேமுதிக மற்றும் பாரதிய ஜனதா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் , மற்றும் கூட்டணிக் கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.
முன்னதாக மனோஜ் பாண்டியன் மைதானம் அருகில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தார்

https://www.youtube.com/watch?v=M3vxte20p4I&t=4s

About Author

error: Content is protected !!