March 3, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

நெல்லை கண்காணிப்பு தீவிரம்

திருநெல்வேலி மாவட்டத்தில் ஏற்கனவே இருவருக்கு  கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது இந்நிலையில் டெல்லி சென்று வந்த 22 பேருக்கு பாசிடிவ் ரிசல்ட் இருப்பதால் நாளை முதல் திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பில் இருக்கப்போகிறது இந்நிலையில் மேலப்பாளையம் பகுதி முழுவதும் காவல்துறையின் முழு கட்டுப்பாட்டில் நாளைமுதல் வர உள்ளது இதையடுத்து நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் நாளை முதல் மேலப்பாளையத்தில் கீழ்காணும் கட்டுப்பாடுகளை விதிக்குமாறு மாநகர காவல் ஆணையர்க்கு தெரிவித்துள்ளார்.

1.பிற பகுதிகளிலிருந்து மேலப்பாளையம் செல்லும் அனைத்து வழிகளும் அடைக்கப்பட்டு போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டம் இல்லாத வண்ணம் தொடர் கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

2.மேலப்பாளையம் பகுதியில் உள்ள பொதுமக்கள் அனைவரும் அவர்தம் வீடுகளுக்குள் தங்கி இருக்கும் வண்ணம் கண்காணிக்க வேண்டும்.

3.அப்பகுதி பொது மக்கள், குடியிருக்கும் தெருக்களின் முனைகளிலேயே மாநகராட்சி மூலமாகவும் வியாபாரிகளின் மூலமாகவும் மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் விற்பனை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் அனாவசியமாக வெளியே நடமாடாமல் இருப்பதை கண்காணிக்க வேண்டும் மேலும் அவ்வாறு விற்பனை செய்யப்படும் இடத்தில் போதுமான சமூக இடைவெளி இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

4.மேலப்பாளையம் பகுதியில் உள்ள முக்கிய சாலைகள் மற்றும் தெருக்களில் இருசக்கர வாகனம் உட்பட அனைத்து வாகனங்களும் இயங்க தடை விதித்து கண்காணிக்க வேண்டும் மேலும் குறிப்பிட்டவாறு பொருட்கள் வாங்கிட வீட்டிற்கு ஒரு நபர் மட்டுமே நடந்து சென்று வர அனுமதித்திட வேண்டும்

உடல்நலக் குறைவு போன்ற அத்தியாவசிய தேவைக்காக மருத்துவ ஆவணங்களுடன் வீட்டை விட்டு வெளியே வரும் நபர்கள் குறித்து விபரங்களையும் அவர்கள் மீண்டும் வீட்டிற்கு திரும்பும் விபரங்களையும் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவலர்கள் தனி பதிவேட்டில் பதிவு செய்துவிடவேண்டும் மேற்படி கட்டுப்பாடுகளை தீவிரமாக செயல்படுத்திட வேண்டும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஷில்பா பிரபாகர் தெரிவித்துள்ளார்

About Author

error: Content is protected !!