February 22, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

நெல்லை உழவர் சந்தைகளில் 500 டன் காய்கறிகள் விற்பனை

நெல்லை உழவர்சந்தைகளில் கடந்த ஒரு மாதத்தில் 500 டன் காய்கறிகள் விற்பனை நடந்துள்ளது.

நெல்லை மாவட்டத்தில் அம்பை, சங்கரன்கோவில், தென்காசி, நெல்லை கண்டியபேரி, மேலப்பாளையம், பாளை மகாராஜநகர் ஆகிய 6 இடங்களில் உழவர் சந்தைகள் உள்ளன.

உழவர் சந்தைகளில் தலா 100 கடைகள் உள்ளன. இங்கு விவசாயிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு காய்கறிகள் விற்பனை செய்கின்றனர். உழவர் சந்தைகளில் அதிகாலை 5 மணிக்கு காய்கறிகள் வரத்து துவங்கும். ஊட்டி, கொடைக்கானல் பகுதிகளில் இருந்து கோஸ், காலிபிளவர், காரட், பீன்ஸ், பட்டர் பீன்ஸ் உருளை கிழங்கு ஆகியன வரத்து உள்ளன.

கத்திரி, வெண்டை, பல்லாரி, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகள் பாவூர்சத்திரம், ஆலங்குளம், சுரண்டை பகுதிகளில் இருந்து வரும். உழவர் சந்தைகளுக்கு தினமும் 50 வகையான காய்கறிகள், கிழங்குகள், கீரை வகைகள் வருகின்றன.

நெல்லை டவுன், மகாராஜநகர் உழவர் சந்தைகளில் தினமும் தலா 10 டன் காய்கறிகள் விற்பனையாகின்றன. தற்போது ஊரடங்கு

என்பதால், உழவர் சந்தைகளை தவிர, பள்ளி மைதானம், விளையாட்டு மைதனாங்களிலும் சமூக இடைவெளியை பின்பிற்றும் விதத்தில் காய்கறி சந்தைகள் நடக்கின்றன. கடந்த 20 நாட்களில் மேலப்பாளையம் தவிர அனைத்து சந்தைகளிலும் சுமார் 500 டன் காய்கறிகள் விற்பனையாகி உள்ளது.

சிவசு.✍️

About Author

error: Content is protected !!