June 17, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

நெல்லையில் உலக தாய்ப்பால் வார விழா

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை அருண் மகாலில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் சார்பில் நடத்தப்பட்ட உலக தாய்ப்பால் வார விழா துவக்க நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி .ஷில்பா பிரபாகர் சதீஷ் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு ஆலோசனை வழங்கினார் பின்னர்  ஆட்சியர் பேசுகையில்

பிறந்த குழந்தையின் முதல் உணவும் முதல் உணர்வும் தாய்ப்பால் தான் சமூக பொருளாதாரமாற்றங்களால் உலகளவில் தாய்ப்பால் தரும் பழக்கம் மக்களிடையே குறைந்து வருகிறது.
பெண்கால பெண்களின் பணி வாய்ப்பு பொருளாதார முன்னேற்றம் போன்றவை காரணமாகதாய்ப்பாலுட்டி குழந்தையின் எதிர்கால நல்வாழ்வுக்கு வலுவான அடித்தளம் அமைப்பது என்பதுகுறைந்து விட்டது.குழந்தை பிறப்பதற்கு முன்பே குழந்தைகளுக்கு தாய்பால் தருவது பற்றியசரியான விளக்கங்களையும், தாய்பாலின் பல வித நன்மைகளை தாய் தந்தை இருவரும் அறிந்து
சொல்வது அவசியம் குழந்தை பிறந்து உரிய கால விடுப்புக்கு பிறகு மனைவி வேலைக்குதிரும்பும்போது அவரது பனியிடத்தில் பாதுகாப்பான குழந்தைகள் காப்பகம், தாய்பாலை சேமிக்கும்
வசதிகள் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள வேண்டும்.
தாய்ப்பால் ஊட்டுவதால் அறிவான நல்ல உடல் நலத்துடன் வளரும் குழந்தைகள் நாட்டுக்கும்வீட்டுக்கும் நல்ல சொத்து தாய்ப்பால் முக்கியத்துவம் பற்றியில் அறிவியல் பாடத்தில் சேர்க்க பட்டு தாய்பால் மவுசு அறிந்து அரசு பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் தாய்பால் ஊட்டும்அறை திறந்துள்ளார்கள். எனவே குழந்தைகளுக்கு தாய்மார்கள் கட்டாயம் தாய்ப்பால் கொடுக்கவேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்
இந்த நிகழ்ச்சியின் போது குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள் மாவட்ட திட்ட அலுவலர்ஜெயசூர்யா , மாநகராட்சி ஆணையாளர் திருமதி.விஜயலெட்சுமி, செய்தி மக்கள் தொடர்பு
அலுவலர் செந்தில் , சுகாதார பணிகள் இணை இயக்குநர் மருத்துவர் செந்தில்குமார் மாநகராட்சிநல அலுவலர் மருத்துவர் .சதீஷ் குமார், இந்திய வானொலி நிலைய முனைவர் சந்திரபுஷ்பம், குழந்தைவளர்ச்சி திட்ட அலுவலர் திருமதி.ராஜபிரியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

About Author

You may have missed

error: Content is protected !!