May 18, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

நெல்லுக்கு உரிய விலை நெல்லை விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை

நெல்லை மாவட்டத்தில் தற்போது பிசான சாகுபடிக்கான பணிகள் முடிந்து அறுவடைக்கு விவசாயிகள் தயாராகி வருகின்றனர். பிசான சாகுபடி தொடக்கத்தில் நல்ல மழை இருந்ததால், தென்காசியை அடுத்துள்ள மேக்கரை அடவி நயினார் கோவில் நீர்த்தேக்க அணையில் இருந்து மேட்டு கால் மற்றும் கரிசல் கால் ஆகிய கால்வாய்கள் மூலம் சுமார் 7300 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் பிசான சாகுபடிக்கான பணிகளை முடித்துள்ளனர். இன்றிலிகுந்து அறுவடை பணிகளை விவசாயிகள் தொடங்கி உள்ளனர். இந்த பகுதியில், கடந்த முறை அறுவடை சமயத்தில் தொடங்கப்பட வேண்டிய நெல் கொள்முதல் நிலையம் காலதாமதமாக தொடங்கியதால் கடும் நஷ்டத்தில் வியாபாரிகளிடமும், இடைத்தரகர்களிடமும் விற்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர்.

இந்த வருடம் கால தாமதம் அறுவடை தொடங்கிய காலத்திலேயே கொள்முதல் நிலையத்தை திறக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இந்த வருடம் பிசான் சாகுபடி தொடக்கத்தில் தண்ணீர் செழிப்பு என்பதால் பயிர்களில் நோய் தாக்கம் ஏற்பட்டு நெல் மகசூல் குறைந்துள்ளது. எனவே விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு உரிய விலை நிர்ணயம் செய்து, அரசு விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்ய வேண்டும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

 

About Author

error: Content is protected !!