May 25, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

நீர் சேமிப்பின் அவசியம் குறித்து பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி

கீழப்பாவூரில் வட்டார வேளாண்மைத்துறை மற்றும் வேளாண் அறிவியல் மையம் இணைந்து நீர் சேமிப்பிற்கான மக்கள் இயக்கம் (ஜல் சக்தி அபியான்) மத்திய அரசு திட்டம் குறித்த விழிப்புணர்வு பேரணி கீழப்பாவூர் ஏ.வி உயர்நிலைப் பள்ளி மாணவ மாணவியிர்கள் மூலம் நடத்தப்பட்டது . பேரணியில் விவசாயிகள் சிக்கன முறையில் நீர் பாசனம் செய்து பயனடையும் படியாக ஒவ்வொரு துளி நீரிலும் அதிக மகசூல் நுண்ணீர் பாசனம் அமைப்பீர் சொட்டு நீர் பாசனம் அமைப்பீர் போன்ற வாசகங்கள் அடங்கிய அட்டைகள் மூலமாகவும் துண்டு பிரசுரங்கள் மூலமாகவும் விவசாயிகளுக்கும் மற்றும் மழைநீர் சேகரிப்பு அடங்கிய அட்டைகள் மூலமாக பொது மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இவ்விழிப்பணர்வு பேரணியை கீழப்பாவூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் உதயகுமார் மற்றும் ஏ.வி பள்ளியின் தலைமையாசிரியர் முருகேசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர் . பேரணியில் ஏ.வி உயர்நிலைப் பள்ளி மாணவ மாணவியர்கள் கீழப்பாவூரின் முக்கிய தெருக்கள் வழியாக மாணவ மாணவியர்கள் விழிப்புணர்வு பதாகைகளை பிடித்தபடி நடந்து சென்றனர் . மேலும் பள்ளி மாணவர்களை வேளாண்மைத்துறை அலுவலர்கள் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் வேளாண் அறிவியல் மைய அலுவலர்கள் வழிநடத்தி சென்றார்கள். இந்நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர்கள் மற்றும் ஏ.வி உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்

About Author

error: Content is protected !!