March 3, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

நீங்கள் குடியிருக்கும் வீட்டில் ராகு தோஷம் உள்ளதா ?

நம்மில் சிலர் வாடகை வீட்டில் குடியிருப்போம் நமக்கு ஏதாவது பிரச்சனை என்றால் உடனே வீட்டை காரணம் காட்டி வேற வீடு சென்று விடுவோம் , அப்படி எத்தனை வீடு மாறிச் செல்ல சரி சொந்த வீட்டுக் காரர்கள் என்ன செய்வார்கள் ஏதாச்சும் தோஷம் இருக்கும் ஜாதகம் பார்க்கலாம் என்பார்கள் அப்படி அனைவருக்கும் வரும் சந்தேகங்களுக்கு பதில் தருகிறார் நமது ஜோதிடர்

ராகுவின் தோஷமுள்ள வீட்டில் நீங்கள் இருக்கின்றீர்களா ? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.ராகுவின் நட்சத்திரங்களான திருவாதிரை சதயம் சுவாதி மற்றும் காலசர்ப்ப தோஷம் நாக தோஷம் சர்ப்ப தோஷம் உள்ளவர்கள் ராகு தசை நடப்பவர்கள் வீட்டில் ஏதேனும் ஒரு இடத்தில் இப்படி ராகுவின் ஆதிக்கம் கண்டிப்பாக இருக்கும்.

நீங்கள் எவ்வளவுதான் வீட்டை ஒதுங்க (சுத்தமாக) வைத்தாலும் இந்த புகைப்படத்தில் இருப்பதை போலவே தேவையற்ற பொருட்களை அப்படியே சேர்த்து வைத்து நீண்ட நாட்களாக அதை யாரும் மாற்ற முடியாத சூழ்நிலையில் அந்த வீடு இருக்கும்.
இது போன்று இருப்பவர்களின் வீட்டில் சொத்து பிரச்சினை தலைவிரித்தாடும் நீண்ட நாள் வழக்கு அப்படியே நிலுவையிலேயே இருக்கும்.
வீட்டில் அடிக்கடி ஏதேனும் பிரச்சினைகள் இருந்து கொண்டேயிருக்கும் இவர்களுடைய வீட்டில் மீன்கள் வளர்த்தால் கூட இறந்து கொண்டேயிருக்கும் வளர்ப்பு பிராணிகள் வளர்க்கவே முடியாது இந்த மாதிரி வீட்டில் ஏதேனும் ஒரு பிரச்சினைகள் இருந்து கொண்டேயிருக்கும் இவர்கள் வீட்டில் ஷ் என்ற பெயருடைய நபர்கள் இருப்பார்கள் அவர்களுடைய ஜாதகத்தில் லக்னம் மற்றும் ஏழாமிடத்தில் ராகு கேது இருக்கும் அல்லது ராகுவின் சாரத்தில் லக்னம் இருக்கும் லக்னத்திற்கு ராகுவின் தொடர்பு இருக்கும்
இவர்கள் அரண்மனையில் போய் இருந்தாலும் இப்படிதான் ராகு ஆதிக்கம் இருப்பதால் அரண்மனையையும் மாற்றி விடுவார்கள் இதை இவர்கள் சரிசெய்யவில்லை என்றால் இந்த வீட்டில் நிரந்தர மருந்து உண்ணும் நோயாளிகள் உருவாவது உறுதியாகும் இதற்கு தீர்வே இல்லையா இருக்குது எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வுகளும் உண்டு ராகு அனச்சாரம் அபச்சாரம் அதன் தாக்கத்தை குறைக்க இவர்கள் வீட்டில் குருவின் காரகத்துவத்தை இயக்க வேண்டும்
அது எப்படி வாரம்தோறும் வெள்ளிக்கிழமை சுமங்கலி பூஜை செய்து பெண்களை வரவழைத்து தானம் கொடுக்க வேண்டும் தினமும் வீட்டில் ஆன்மீக பாடல்கள் ஒலிக்க வேண்டும்.முதலில் தேவையற்ற பொருட்கள் இருப்பதும் சரி கிடையாது அதை ஒழுங்குபடுத்தி வைக்க வேண்டும் தேவையில்லாமல் நிறைய சாமான்களை வாங்கி வைக்க கூடாது தேவையற்றதை பரணில் போட்டு விட வேண்டும் அடிக்கடி நாகர் சிலைகளை போய் மாரியம்மன் காளியம்மன் கோயிலில் பார்த்து வர வேண்டும் புற்றுக் கோயில்களுக்கு சென்று தரிசனம் செய்து வர வேண்டும் தூய சந்தனம் வீட்டில் அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும் குருவின் அனைத்து காரகத்துவ பொருட்களையும் வீட்டிற்குள் கொண்டு வந்து விட வேண்டும்.
ராகுவின் காயத்ரி மந்திரம் பாராயணம் செய்ய வேண்டும்.மாற்று மதத்தவர்களை மதிக்க வேண்டும் திட்டக் கூடாது முடிந்தளவு தினமும் வீட்டை ஒதுங்க வைக்க வேண்டும் இதை இவர்கள் செய்யாத வரைக்கும் வீட்டில் மனநிம்மதி இருக்காது வாழ்க்கையில் முன்னேற்றம் கிடைக்காது நாலு திக்குகளில் நாய்படாத பாடு இந்த குடும்பத்தில் உள்ளவர்கள் படுவார்கள் முதலில் சரிவர சாமி கும்பிட மாட்டார்கள் இந்த வீட்டில் யாராவது ஒருவர் சாமியை திட்டிக் கொண்டேயிருப்பார்கள் நாத்திகம் பேசுவார்கள் இதையெல்லாம் அவர்கள் செய்யவில்லை ராகு பகவான் செய்கிறார் ராகுவின் பிடியிலிருந்து இவர்களால் எளிதில் தப்பிக்கவே முடியாது குருவின் துணை கொண்டே ராகுவின் ஆதிக்கத்தை எதிர்த்து போராட வேண்டும்.
இதையெல்லாம் நம்மை மாதிரி நபர்கள் இவர்களிடம் சொன்னாலும் அவர்கள் முதலில் புரிந்து கொள்ள மாட்டார்கள் மேலும் நம்மிடமே விதண்டாவாதங்களில் ஈடுபடுவார்கள் இதுதான் இவர்களின் கர்மா.

பிரேம்சந்த் நம்பிராஜன் சென்னை செல்லிடப்பேசி எண்கள் 9789168398/7708873905 யாருடைய வீட்டில் இப்படி இருந்தாலும் நிலைமை முற்றும் முன்பு மாற்றி விடுங்கள் கிருஷ்ணார்ப்பணம் சித்தர்களுக்கே அர்ப்பணம் சிவார்ப்பணம் நற்பவி நற்பவி நற்பவி முருகா சரணம் போற்றி

About Author

error: Content is protected !!