May 25, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

நிம்மதி ,அமைதி ,சுகமான வாழ்வு பெற இவரிடம் சரணடையுங்கள்

வேட்டைக்காரன்புதூர் அழுக்கு சித்தர் சுவாமிகள் போற்றி அழுக்கு சித்தர் அருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் ஓம் நமசிவாய ஓம் குருவே சரணம் ஓம்

சுமார் 80 ஆண்டுகளாக பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூர் ஊரில் உலாவியவர்

இவர் எப்போது குளிக்கிறார் என்பதை தெரியாத மக்கள் இவரை அழுக்கு சாமி என அழைகக்க அதுவே இப்பெயர் வழங்கப்பட்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது மற்றபடி இவரது இயற்பெயர் பூர்வீகம் மற்றும் இளம் பருவம் பற்றி சரியான செய்திகள் எதுவும் கூறப்படவில்லை

இளம் பருவத்திலேயே குடும்பத்தை விட்டு வெளியேறியதாக கேள்வி நம் நாட்டில் செயற்கரிய செயல்களைச் செய்த சித்தர்கள் ஏராளமானோர் காலம்தோறும் இருந்து வந்துள்ளனர் இன்றும் சித்தர்கள் நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் பதினெண் சித்தர்கள் என்று ஓர் எண்ணிக்கையை நாம் சித்தர்களுக்கு வழஙுகியுள்ளோம் ஆனால் இந்த எண்ணிக்கை சரியானதன்று அந்த பதினெட்டுச் சித்தர்கள் தலையாய சித்தர்களாக மக்களால் நன்கு அறியப்பட்டவர்களாக இருந்தார்கள் என்பதே பொருந்தும்

நாயன்மார்களிலே கூட திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசர் சுந்தரர் மாணிக்கவாசகர் முதலியோர் இறையருளால் பல சித்துக்களை செய்து சித்தர்களாகவே விளங்கியுள்ளார்கள் அந்த வகையில் இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த பல சித்து விளையாடல்களை செய்து மக்களுக்கு அருள் செய்த தெய்வம் அருள் மிகு அழுக்கு சித்தர் சுவாமிகள்
.சித்தர்கள் பற்றி எழுதுவதற்கு எவ்வளவு வேண்டுமானாலும் செய்யலாம் சொல்லலாம் பேசலாம் அதற்கு என்றுமே முடிவு கிடையாது சித்தர்கள் தேடல் எல்லோருக்குமானதே முடிந்தவரை இந்த பதிவுகளை படித்து விட்டு வெறும் லைக்கிடுவதோடு நின்று விடாதீர்கள் உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இந்த ஜீவசமாதி தேடல் பற்றிய பதிவுகளை பகிருங்கள் எமக்கு ஏதேனும் கைமாறு செய்வதாக எண்ணினால் யாம் குறிப்பிடும் ஜீவசமாதிக்கு குடும்பத்தினருடன் சென்று உங்களால் ஒரு விளக்கு ஏற்றினாலே போதும் இதை லைக்கிடுவதிலோ பகிர்வதிலோ உள்ள ஆனந்தத்தை விடவும் நீங்கள் இந்த ஜீவசமாதி சென்று வழிபட்டு வந்தால் எம் நோக்கம் பூர்த்தியாகும்.

சித்தர்கள் உங்களை நாடி தேடி வருகின்றனர் அவர்களின் பரிபூரண அருள் கிடைக்கும் உங்கள் அனைவருக்கும் பதிவுகளை முழுவதும் படியுங்கள் உங்கள் வாழ்க்கையில் நிம்மதியையும் அமைதியையும் தந்து சுகமான வாழ்வளிப்பார் அழுக்கு சித்தர் இவர் 1918ம் ஆண்டு கார்த்திகை மாதம் மிருகசீரிசம் நட்சத்திரத்தில் வேட்டைக்காரன் புதூரிலேயே ஓரிடத்தினைத் தேர்ந்தெடுத்து ஜீவ சமாதியானார். அவருடைய ஜீவ சமாதி தற்போது அழுக்கு சாமியார் கோவில் அமைந்துள்ளது.

ஜோதிடர் பிரேம் சந்த் நம்பிராஜன் சென்னை 7708873905

ஜோதிடர் முகவரி

About Author

error: Content is protected !!