June 22, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

நாளை வழக்கம் போல் பால் விநியோகம் உண்டு -பால் முகவர்கள் அறிவிப்பு

நாளை (ஏப்ரல்-18) நமது பாராளுமன்ற மற்றும் தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கின்ற காரணத்தால் சென்னை போன்ற பெருநகரங்களில் பணியாற்றுபவர்கள் தங்களின் சொந்த ஊருக்கு சென்று வாக்கினை பதிவு செய்யும் நோக்கில் ஏப்ரல்-18ம் தேதி தமிழக அரசு விடுமுறை தினமாக அறிவித்துள்ள நிலையில் தனியார் நிறுவனங்களும் தங்களின் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்க தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் நாளை நடைபெறும் வாக்குப்பதிவினை முன்னிட்டு தமிழக அரசு விடுமுறை தினமாக அறிவித்திருப்பதால் பால் விநியோகம் இருக்குமா..? என்கிற சந்தேகம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. அந்த சந்தேகத்தினை பொதுமக்கள் எங்களது பால் முகவர்களிடம் தெரிவித்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.

உயிர் காக்கும் அத்தியாவசிய உணவுப் பொருளாக விளங்கும் பாலினை பொதுமக்களுக்கு தங்குதடையின்றி விநியோகம் செய்திடும் பணியை பால் முகவர்கள் அனைவரும் வழக்கம் போல் மேற்கொள்வார்கள். மேலும் ஆவின் மற்றும் தனியார் பால் நிறுவனங்களின் பால் பொதுமக்களுக்கு தங்குதடையின்றி வழக்கம் போல் கிடைக்கும் என்பதையும், “நாளை (ஏப்ரல்-18) பால் கிடைக்காது என்கிற வதந்திகளை பொதுமக்கள் எவரும் நம்ப வேண்டாம்” என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் தமிழகம் முழுவதும் சேவை சார்ந்த தொழிலான பால் வணிகத்தில் ஈடுபட்டு வரும் பால் முகவர்கள் அனைவரும் மக்கள் நலப்பணியாற்றிக் கொண்டே ஜனநாயக கடமையாற்றும் வகையில் தங்களின் வாக்குகளை பதிவு செய்வார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க நிறுவனர் மற்றும் மாநில தலைவர் சு.ஆ.பொன்னுசாமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்

About Author

error: Content is protected !!