March 3, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி புகார்

நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி புகார்  ஒன்றை அளித்துள்ளார்  சமீப காலமாக சீமான் ,நடிகை விஜய லட்சுமி  இணைந்து இருக்கும் புகைப்படங்கள் ,வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வந்தவண்ணம் இருந்தன , இந்நிலையில்  விஜயலட்சுமி சீமானுக்கு எதிராக அவரே பேசி தொடர்ச்சியாக வீடியோ வெளியிட்டு வந்தார் , இதற்கு  சீமான் தரப்பு பதில் ஏதும் தரவில்லை , ஆனால்  அவரது ஆதரவாளர்கள் பலரும் அவருக்கு எதிரான கருத்துக்களை பதிவிட்டு வந்தனர்  இதைத்தொடர்ந்து

சீமானின் தூண்டுதலால் அவரது கட்சியினர் தனக்கு கொலை மிரட்டல் விடுத்து, சமூக வலைதளங்களில் கொச்சைப்படுத்தி தகவல் பரப்புவதாக நடிகை விஜயலட்சுமி போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளார்!

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு துணை ஆணையர் ஜெயலட்சுமியிடம் நடிகை விஜயலட்சுமி புகார் ஒன்றை அளித்துள்ளார் அதில் சீமான் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து கட்சி மேடைகளில் தன்னை பற்றி அவதூறாக பேசி வருவதாகவும், இதனால் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் புகாரில் கூறியுள்ளார்.

About Author

error: Content is protected !!