February 28, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

நாங்குநேரி இடைத்தேர்தல் தேர்தல் பணியாளர்கள் குலுக்கல் முறையில் தேர்வு

நாங்குநேரி இடைத் தேர்தல் பணியில் வருகிற அக்டோபர் 21ம் தேதி நடக்கிறது. இதற்கான பொதுப் பார்வையாளராக விஜய சுனிதாவை இந்திய தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.
அவர் நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள 1400 அலுவலர்கள், பணியாளர்கள் நியமிக்கப்படவுள்ளனர். அவர்களை கணினி மூலம் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுவதை ஆய்வு செய்தார். ஆய்வின் போது நெல்லை கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ் உடன் இருந்தார்.
இதுகுறித்து கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ் கூறியதாவது:
நாங்குநேரி தொகுதியில் 2,56,514 வாக்காளர்கள் உள்ளனர். மொத்தம் 299 வாக்குச் சாவடிகள் உள்ளனர்.தேர்தல் பணிகளை பார்வையிட பொதுப் பார்வையாளராக வஜய சுனிதா மத்திய தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள அலுவலர்கள், பணியாளர்கள் கணினி மூலம் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும் பணிகளை பார்வையிட்டோம்.
கணினி வழி குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு உரிய ஆணைகள் மற்றும் பயிற்சிகள் வழங்கப்பட்டு தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இநுத தேர்தல் பணியில் ஈடுபடுவதற்காக வருவாய்த்துறை, கல்வித்துறை உள்ளிட்ட 1400 தேர்தல் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேர்தல் பொதுப் பார்வையாளரை 9383285645 என்ற செல்போனிலும், அரசு சுற்றுலா மாளிகை அறை எண் 7ல் நேரிலும் பொதுமக்கள், வாக்காளர்கள் தொடர்பு கொண்டு தேர்தல் தொடர்பாக புகார் தெரிவிக்கலாம் என்றார்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் பூ.முத்துராமலிங்கம், தேர்தல் வட்டாட்சியர் தங்கராஜ் ஆகியோர் உட்பட பலர் உடன் இருந்தனர்

About Author

error: Content is protected !!