May 21, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

நம் தேசத்து மக்களின் தாகம் தனிய ஊரடங்கு விரைந்துவிடைபெறட்டும்-கல்வியாளர் இராஜசேகரன்

நம் தேசத்து மக்களின் தாகம் தனிய ஊரடங்கு விரைந்து விடைபெறட்டும். !

இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தி 15 வது நாளான இன்று பல்வேறு தரப்பினரும் ஊரடங்குதளர்த்தப்படுமா? நீட்டிக்கப்படுமா ? என்ற விவாதத்தை தொடர்கின்றனர். ஊரடங்கின் காலம் இன்னும் 7 நாட்கள் இருக்கும் நிலையில் மத்திய அரசு அடுத்த கட்ட நடவடிக்கைக்கான தீவிரஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது.

சீனா கற்றுத்தந்த பாடம்

கடந்த டிசம்பர் மாத இறுதியில் சீனாவை உலுக்கத் தொடங்கிய கொரானா வைரஸ் பல நாடுகளுக்கு பரவிய பின் மார்ச் மாத இறுதி வாரத்தில் கொரானா இல்லாத மாநிலமாக சீனா உயிர்பெற்றுவிட்டது என தம்பட்டம் அடித்தனர் சீன மக்கள் .திரும்பவும் புழு பூச்சிகளை உணவாக சமைத்து சாப்பிட்டு மகிழ்ந்தனர். இந்தநிலையில் வெளிநாட்டில் இருந்து தாய்நாட்டுக்கு திரும்பிய சீனர் களால் மீண்டும் தொற்று பாவும் அபாயம் ஏற்பட்டது . இன்று மட்டும் 39 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், எந்தவித அறிகுறியும் இல்லாமல் 757 பேருக்கு இரத்த மாதிரி பரிசோதனையில் கொரானா உறுதிசெய்யப்பட்டு உள்ளதாக சீனா அறிவித்துள்ளது . சீனாவில் கொரானா இரண்டாம் கட்ட தாக்குதலை தொடுக்குமா என்ற அச்சம் உலக நாடுகளிடையே ஏற்பட்டுள்ளது. இந்தியாவுக்கு அனுபவ பாடத்தை சீனாவின் தற்போதைய நிகழ்வு ஏற்படுத்தி உள்ளது.

ஏறுமுகத்தில் நோய் தொற்று

இந்தியாவில் கொரானா தொற்று பரவல் தொடங்கிய நாள் முதல் டெல்லி ,மகராஷ்ட்ரா ,தமிழகம் ,தெலுங்கான , ஆந்திரா , உத்திர பிரதேசம் , ராஜஸ்தான் , மத்திய பிரதேசம் , கர்நாடகா மற்றும் குஜராத் உள்ளிட்ட 11 மாநிலங்களில் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஒவ்வொறு மாநில அரசும் தினந்தோறும் மத்திய அரசுக்கு அளிக்கும் அறிக்கைகள் ஊரடங்கை நீட்டிக்கும் தேவையை வலியுறுத்துவதாக மத்திய அரசு உணர்கிறது. இருப்பினும் இந்திய அரசியலமைப்பு சட்டப்படி எடுக்க வேண்டிய முடிவுகள் குறித்து பல்வேறு நிலைகளில் தீவர ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. மக்களின் வாழ்கையை தியாகம் செய்வதா? அல்லது வாழ்வாதாரத்தை தியாகம் செய்வதா ? என்ற இக்கட்டான சூழலில் மருத்துவ வல்லுனர்களும் , தொற்றுநோய் நிபுணர்களும் ஊரடங்கை சில காலம் நீட்டிக்க மத்திய அரசை வற்புறுத்தி வருகின்றனர்.

பசி-பட்டினியால் வாடும் அமைப்புசாரா தொழிலாளர்கள்

சிறு , குறு , நடுத்தர தொழில்கள் மூடப்பட்டு வேலையை இழந்து தவிக்கும்போது விளிம்புநிலை மக்களால் வாழ்வாதாரத்தை இழந்து உழைப்புக்கு வழியின்றி சமூக விரோத செயல்களும் பசி – பட்டினி யும் தலைவிரித்து ஆடி விடக் கூடாது. அமைப்புசாரா தொழிலாளர்களான முடிதிருத்துவோர் ,சலவைத்தொழிலாளர்கள் , வீட்டுப் பணியாளர்கள் , பனைமர தொழிலாளர்கள். கல் உடைப்போர், கட்டுமானதொழிலாளர்கள் ,ஓவியர்கள் , கொல்லர்கள் ,பொற்கொல்லர்கள் ,பிளம்பர், எலெக்டிரிசியனும் வாழ்வாதாரத்தை தொலைத்து வீதிக்கு வந்து விடக்கூடாது என்பதை தன்னார்வ தொண்டுநிறுவனங்கள் பிரதமரின் கவனத்துக்கு எடுத்துச் சென்றுள்ளன . இவர்களின் வாழ்வாதாரம் பாதிக்காமலிருக்க ஊரடங்கை தளர்த்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துவருகிறது .

பொருளாதார வீழ்ச்சி

பங்கு சந்தை வீழ்ச்சி பெரிய தொழில்நிறுவனங்களின் உற்பத்தியின்மையால் உலகப் பணக்காரர் வரிசையில் முன்னிலையில் அடையாளப்படுத்தப்பட்ட அம்பானி 28 சதவிதமும் அதானி 37 சதவீதமும் சொத்துமதிப்பை பங்குச் சந்தை வீழ்ச்சியின் காரணமாக இழந்துவிட்டதாக தொழில்முனைவோர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. உயர் கல்வி ,தொழில்நுட்ப கல்வி பயின்று கார்பரேட் நிறுவனங்களில் பணியாற்றி வரும் பணியாளர்களுக்கு அரசின் உத்தரவை தொடர்ந்து மார்ச் மாத சம்பளத்தை நிறுவனங்கள்வழங்கி விட்டனர். பொருளாதார சுழற்சி முற்றிலும் முடங்கிய நிலையில் ஊரடங்கு நீடித்தால் அடுத்த மாத ஊதியத்தை வழங்க அதிக ஊழியர்களுடன் செயல்படும் நிறுவனங்கள் நிதி ஆதாரத்தை எங்கு திரட்டுவார்கள், எப்படி சமாளிப்பார்கள் என்ற அறிக்கையும் மத்திய நிதித்துறை , தொழில்துறை அமைச்சர்களுக்கு தொழில்முனைவோர் கூட்டமைப்பு சார்பில் சமர்பிக்கப்பட்டுள்ளது. தொழில்முனைவோரும் பல்வேறு தொழில் நிறுவனங்களோடு நீண்ட ஆலோசனையை நடத்தி வருகின்றனர்.

நம்பிக்கை தரும் பிரதமர் அறிவிப்பு

பாரதப் பிரதமர் நாட்டு மக்களுக்கு வெளியிட்டுள்ள அறிவிப்பில் உயிரியல் போரில் வெற்றி கண்டு விரைவில் மந்தநிலையில் இருந்து மீண்டு இயல்புநிலைக்கு திரும்ப வேண்டும். நமது தேவைகளுக்கு மற்ற நாடுகளை சார்ந்திருக்காமல் உள்நாட்டு தயாரிப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். தொழில் உற்பத்தி ஏற்றுமதி அதிகரிக்க இந்தியாவின் பிரதான 10 துறைகள் 10 அம்ச திட்டங்களை உடனடியாக தீட்டி செயலாற்ற உத்தரவிட்டுள்ளார் .அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும் . பதுக்கலை தடுக்கவும் ,பழங்குடிமக்களின் தயாரிப்பு பொருட்களை சந்தைப்படுத்தவும்அந்தந்த துறை அமைச்சர்கள் அக்கறை காட்ட வேண்டுமென பிரதமர் ஆணையிட்டுள்ளார் இந்த அறிவிப்பு இந்தியாவில் ஊரடங்கு விரைவில் முடிவுக்கு வரும் எனும் நம்பிக்கையை தருகிறது. .

சேமிக்கும் பழக்கம்

உலக நாடுகள் பொருளாதார வீழ்ச்சியை பெரிய அளவில் பெற்றாலும் இந்தியாவில் நம்முடைய சேமிக்கும் பழக்கம் நமக்கு பெரிய பொருளாதார பின்னடைவை ஏற்படுத்தாது என பொருளாதார வல்லுனர்கள் மதிப்பீடு செய்கின்றனர்.இந்திய மக்கள் அவர்களின் வருவாய்க்கு ஏற்ப அவர்கள் வருமானத்திலிருந்து ஒரு பகுதியை சிறுக சிறுக சேமிக்கும் பழக்கத்தை தொன்றுதொட்டு கடைப்பிடித்து வருகின்றனர் . இந்த செயல் உலக பொருளாதார சந்தையில் இந்தியாவுக்கு தனியிடத்தை தருகிறது .அத்தகைய சேமிப்பு கரைவதற்குள் அடுத்த கட்ட முன்னேற்றத்தை நோக்கி இந்தியா பயணித்து மனித உயிர்களை பலி கொடுக்காமல் , வாழ்வாதாரத்தையும் சிதைக்காமல் உயிரியல் போரில் வெற்றி கண்டு ஊரடங்கிற்க்கு விடை கொடுக்க வேண்டும் என்பதே நமது தேசத்தின் கடைசி மனிதனின்ஆசை …..

நாட்டு மக்களின் ஒருங்கிணைந்த ஒத்துழைப்பால் ஊரடங்கிற்க்கு விரைந்து விடைகொடுப்போம்
….

கட்டுரையாளர் ஜா.இராஜசேகரன்
 கல்வியாளர் ,சமூக ஆர்வலர் ,
மனிதவள மேம்பாட்டு ஆலோசகர்

About Author

You may have missed

error: Content is protected !!