June 17, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

நம்பிக்கையுடன் செயல்படுங்கள் நோய்களை தீர்க்கும் திருநீற்றுப்பதிகம்

 

கடுமையான நோய்களை தீர்க்கும் திருநீற்றுப்பதிகம்.இதை அனைவரும் உலக மக்களின் நன்மைக்காகவும் கொரோனோ வைரஸ் நோய் பரவாமல் தடுக்க உங்களின் டைம் லைனில் பதிவிடுங்கள் சொல்லுங்கள் எழுதுங்கள் படியுங்கள்.எல்லோருக்கும் பகிர்ந்து உதவுங்கள்.உங்கள் வீட்டிலிருந்தே விளக்கு ஏற்றி வைத்து இந்த பதிகத்தை படியுங்கள் நம்பிக்கையுடன் செயல்படுங்கள் எந்தவிதமான நோய் கிருமிகளும் யாரையும் தாக்காது.#பிரேம்சந்த்_நம்பிராஜன் #PREMCHAND_NAMBIRAJAN

மந்திரம் ஆவது நீறு வானவர் மேலது நீறு சுந்தரமம் ஆவது நீறு துதிக்கப்படுவது நீறு தந்திரம் ஆவது நீறு சமயத்தில் உள்ளது நீறு செந்துவர் வாய் உமை பங்கன் திரு ஆலவாயன் திருநீறே

வேதத்தில் உள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு
போதம் தருவது நீறு புன்மை தவிர்ப்பது நீறு ஓதத் தகுவது நீறு உண்மையில் உள்ளது நீறு சீதப் புனல் வயல் சூழ்ந்த திரு ஆலவாயான் திருநீறே

முத்தி தருவது நீறு முனிவர் அணிவது நீறு சத்தியம் ஆவது நீறு தக்கோர் புகழ்வது நீறு பத்தி தருவது நீறு பரவ இனியது நீறு
சித்தி தருவது நீறு திருஆலவாயான் திருநீறே

காண இனியது நீறு கவினைத் தருவது நீறு பேணி அணிபவர்க்கு எல்லாம் பெருமை கொடுப்பது நீறு
மாணம் தகைவது நீறு மதியைத் தருவது நீறு சேணம் தருவது நீறு திரு ஆலவாயான் திருநீறே

பூச இனியது நீறு புண்ணியம் ஆவது நீறு பேச இனியது நீறு பெருந்தவத் தோர்களுக்கு எல்லாம்
ஆசை கெடுப்பது நீறு அந்தம்அது ஆவது நீறு
தேசம் புகழ்வது நீறு திரு ஆலவாயான் திருநீறே

அருத்தம் அது ஆவது நீறு அவலம் அறுப்பது நீறு
வருத்தம் தணிப்பது நீறு வானம் அளிப்பது நீறு
பொருத்தம் அது ஆவது நீறு புண்ணியர் பூசும் வெண்ணீறு
திருத்தகு மாளிகை சூழ்ந்த திரு ஆலவாயான் திருநீறே

எயில் அது அட்டது நீறு இருமைக்கும் உள்ளது நீறு
பயிலப் படுவது நீறு பாக்கியம் ஆவது நீறு துயிலைத் தடுப்பது நீறு சுத்தம் அது ஆவது நீறு
அயிலைப் பொலிதரு சூலத்து ஆலவாயான் திருநீறே

இராவணன் மேலது நீறு எண்ணத் தகுவது நீறு
பராவணம் ஆவது நீறு பாவம் அறுப்பது நீறு தராவணம் ஆவது நீறு தத்துவம் ஆவது நீறு அரா வணங்கும் திருமேனி ஆலவாயான் திருநீறே

மாலொடு அயன் அறியாத வண்ணமும் உள்ளது நீறு
மேல் உறை தேவர்கள் தங்கள் மெய்யது வெண்பொடி நீறு
ஏல உடம்பு இடர் தீர்க்கும் இன்பம் தருவது நீறு
ஆலம் அது உண்ட மிடற்று எம் ஆலவாயான் திருநீறே

குண்டிகைக் கையர்களோடு சாக்கியர் கூட்டமும் கூட கண் திகைப் பிப்பது நீறு
கருத இனியது நீறு
என் திசை பட்ட பொருளார் ஏத்தும் தகையது நீறு
அண்டத்தவர் பணிந்து ஏத்தும் ஆலவாயான் திருநீறே

ஆற்றல் அடல் விடை ஏறும் ஆலவாயான் திருநீற்றைப் போற்றிப் புகலி நிலாவும் பூசுரன் ஞானசம்பந்தன் தேற்றித் தென்னன் உடல் உற்ற தீப்பிணி ஆயின தீரச் சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே
திருச்சிற்றம்பலம்

தொடர்புக்கு  #பிரேம்சந்த்_நம்பிராஜன் 7708873905

ஜோதிடர் முகவரி

About Author

You may have missed

error: Content is protected !!