February 22, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

நடிகர் விஜய்சேதுபதியை கண்டித்து வணிகர்கள் போராட்டம்

ன்லைன் வர்த்தகத்தை ஊக்குவித்து தனியார் நிறுவனத்தின் விளம்பரத்தில் நடிக்கும் விஜய்சேதுபதியை கண்டித்து வணிகர்கள் போராட்டம் வலுக்கிறது.தற்போது அனைத்து அத்தியாவசியப்பொருட்களும் ஆன்லைன் மூலம் வணிகம் செய்யும் முறை அதிகரித்து வருகிறது. இதனால் தனியார் ஆன்லைன் நிறுவனங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் சிறுகுறு வியாபாரிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருகிறார். தமிழ்நாடு அனைத்து வணிகர்கள் கூட்டமைப்பு தொடர்ந்து ஆன்லைன் வணிகத்திற்கு எதிராக போராடி வருகிறது. இந்நிலையில் நடிகர்  விஜய் சேதுபதி நடித்த விளம்பரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மூக நலனில் அக்கரையுள்ள நடிகர் விஜய் சேதுபதி தொடர்ந்து பல்வேறு நல்ல விஷயங்களை செய்து வருகிறார். மக்கள் செல்வாக்கு நிறைந்த நடிகராகவும் இருக்கிறார். இந்நிலையில் இது போன்ற தனியார் ஆன்லைன் நிறுவனங்களின் விளம்பரத்தில் நடிப்பதன் மூலம் மக்கள் அந்த விளம்பரத்தினை கூடுதலாக கவனிக்கும் நிலை ஏற்படும். விளம்பரம் மூலம் ஆன்லைன் வணிகம் பெருகும் சிறுகுறு வியாபாரிகள் அதிக அளவில் பாதிக்கப்படுவார்கள் என வியாபாரிகள் தரப்பினர் கூறுகின்றனர். இந்த விளம்பரத்தில் விஜய்சேதுபதி நடிக்கக்கூடாது என கோரிக்கை வைத்துள்ளனர். முன்னதாக விஜய் சேதுபதியின் வீடு முற்றுகையிடப்படும் என தமிழ்நாடு அனைத்து வணிகர்கள் பேரமைப்பு சார்பாக கூறப்பட்டிருந்த நிலையில் தற்போது வரும்செபடம்பர்  5ம் தேதி விஜய்சேதுபதியின் அலுவலகம் முற்றுகைப் போராட்டம் நடத்த திட்டமிட்ருப்பதாக அறிவித்துள்ளனர்.-

About Author

error: Content is protected !!