June 17, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

நடப்பாண்டில் 26.30 மில்லியன் டன் தானிய உற்பத்திக்கு இலக்கு

நடப்பாண்டில் 26.30 மில்லியன் டன்தானிய உற்பத்திக்கு இலக்கு என இந்திய பருப்பு மற்றும் தானியங்கள் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

பொதுவாக மக்கள் மத்தியில் பருப்புக்கு எப்போதும் தனி மவுசு உண்டு ,கடலை பருப்பு,உளுந்த பருப்பு பாசிப்பருப்பு பயத்தம்பருப்பு ,மைசூர் பருப்பு, துவரம்பருப்பு பச்சைபயிர் என பல வகை உண்டு , பொதுவாக விழாக்கள் மற்றும் விஷேசங்கள் என்றால் பருப்பு முகியத்துவம் இருக்கும் , சாம்பார், வடை,பாயசம் என பல பரிமாணங்கள் எடுக்கும் , பருப்பை தவிர்த்து விழாக்கள் இல்லை என்றாகி விட்டது , வரும் ஆண்டுகளில் பருப்புக்கு இன்னும் மவுசு உண்டு என்கின்றனர் உற்பத்தியாளர்கள்

இந்திய பருப்புவகைகள் வரத்தகம் மற்றும் தொழில்துறைக்கான நோடல் அமைப்பான, இந்திய பருப்புகள் மற்றும் தானியங்கள் சங்கம் சார்பில், உலக வர்த்தக மாநாடு பிப்ரவரி மாதம் மும்பையில் நடந்தது.
அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, மியான்மர், உகாண்டா, தான்சானியா மற்றும் இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து ஆயிரத்திற்கும் அதிகமான வர்த்தக பங்குதாரர்கள் பங்கேற்றனர்.

மாநாட்டில் உள்நாட்டு தானிய உற்பத்தி மற்றும் நுகர்வு அதிகரித்தல், ஏற்றுமதி, மதிப்பு கூட்டல், புரோட்டீன் பிரித்தெடுத்தல், அறுவடைக்கு பின் பயிர் மேலாண்மை, வணிக மற்றும் ஆராய்ச்சிக்கான சுற்றுச்சூழல் அமைப்பை துாண்டுவது, உலகளாவிய இடையூறுகள், உள்நாட்டு பயிர்கள் பற்றிய விஞ்ஞான தகவல்கள், தொழில் முனைவோருக்கான செயல்பாடுகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

.
இந்தியாவில் பருப்பு வகைகள் உற்பத்தி ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. 2013–14ம் ஆண்டில், 19 மில்லியன் டன் உற்பத்தி 2018–19ல் 23 மில்லியன் டன்னாக அதிகரித்தது. 2019–20ம் ஆண்டில் 26.30 மில்லியன் டன்னாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக இந்திய பருப்பு மற்றும் தானியங்கள் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்

✍️ சிவசு

About Author

You may have missed

error: Content is protected !!