May 25, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

நச்சுயிரியை நசிக்கிட போர் கால அடிப்படையில் தமிழக அரசு-சமூக ஆர்வலர் இராஜசேகரன்

உலகளாவிய நண்பர்கள் குழுமத்தால் பகிரப்பட்ட வலைதள தகவல்களால் ஒரு பக்கம் பீதியையும் மறுபக்கம் குழப்பத்தையும் விதைத்து வருகிறது..எந்த ஒரு நிகழ்வைப் பற்றி செய்திகள் வந்தாலும் அதில் நேர்-எதிர்மறை பறிமாற்றம் இருக்கும். கொரானா வைரஸ் எனும் நச்சுயிரி விஷயத்தில் பரப்பப்படும் தகவல்கள் வரம்பில்லாத போலியான தகவல்களோடு -எதிர்மறை நிலையை எட்டியுள்ளது. இதனால் பயத்தின் உச்சத்தில் மக்கள் தத்தளித்து வருகின்றனர்

நச்சுயிரியின் பருவம் இரண்டாம்நிலையில்

உலகில் உள்ள 200 நாடுகளில் தொற்றுநோயின் தாக்கம் வெவ்வேறு நிலைகளில் இருந்து வருகிறது..இந்தியாவில் அடைகாத்தலில் இருந்து குஞ்சுபொரிக்கும் இரண்டாம் நிலைக்கு கடந்துள்ளது. ஏப்ரல் மாதம் 8ம் தேதி வரை இந்த நிலை நீடிக்கும் . இந்த நிலையில் அதிரடி நடவடிக்கைகள் எடுத்து பொதுவெளியில் மக்கள் நடமாட்டத்தை கட்டுக்குள் கொண்டுவந்தால் மட்டுமே பெருமூச்சு விட்டு ஆறுதல் அடையமுடியும் .இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரானா உறுதிசெய்யப்பட்ட பின் தனிமைப்படுத்தப்பட்டு தனியறையில் கதவுக்கு வெளியே வைக்கப்படும் உணவை உதவ யாரையும் அழைக்காமல்தானே எடுத்து சாப்பிட்டு வருகிறார் பிரான்சில் ஜி7 மாநாட்டில் இங்கிலாந்து பிரதமரை சந்திப்புக்கு பின் நட்பு பாராட்டிவரும் நம் பாரத பிரதமர் நரேந்திர மோடி தகவல் தெரிந்து அதிர்ந்து போனதுடன் இயற்கை சீற்றத்தின்போது மீட்புப் பணியில் போர் தந்திரத்தோடு பணியாற்றுவதுபோல் ஒவ்வொரு மாநில முதல்வரையும் நேரில் தொடர்பு கொண்டு முடுக்கிவிடுகிறார்.

உலகம் முழுக்க ஊரடங்கு அமல்படுத்தாமல் அலட்சியப்படுத்தியிருந்தால் வைரஸ் 4 கோடி உயிர்களை காவு வாங்கியிருக்கும் 100 கோடி பேர் நோய்தொற்றில் சிக்கியிருப்பார்கள் என்கிற லண்டன் இம்பீரியல் கல்லூரியின் ஆறுமாத ஆராய்ச்சி அறிக்கையை பார்த்த நம் பாரத பிரதமர் உரைந்துபோனதுடன் இப்படிப்பட்ட பாதிப்புக்கு இந்தியா இடமளித்துவிடக் கூடாது என்று தனது முழு ஆளுமையையும் வைரஸ் ஒழிப்பு பணிக்கு அர்பணித்துவிட்டார் .ஒவ்வொரு மாநிலத்திற்கும் உத்தரவுகள் பறந்துகொண்டிருக்கிறது.

தமிழகம் முன்னிலை

இரண்டு விதமான அணுகுமுறையோடு தமிழகம் மாநில மக்களை கொரனாவைரஸில் இருந்து பாதுகாக்கும் பணியில் முன்னிலை வகிக்கிறது. இரண்டாம்நிலையில் இருக்கும் வைரஸ் ஒரு வேளை தாக்குதலை தொடங்கி விட்டால் சிகிச்கை அளிக்க டாக்டர்களுக்குமுறையான பயிற்சியளிக்கப்பட்டு வருகிறது. தொற்று இருக்கிறதா என்பதை உறுதிசெய்யும் உயர்திறன் ஆய்வகங்கள் அமைக்கும் பணியும் முடுக்கிவிடப்பட்டுள்ளது..தொற்றுநோயாளிகளின் எண்ணிக்கை உயர்ந்தால் சமாளிப்பதற்கு வசதியாக 15000 படுக்கைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

தொற்றுநோயை மூன்றாவது கட்டத்தை அடைய விடாமல் தடுக்க திட்டம்

ஆரம்பகட்டத்தில் வெளிநாட்டில் இருந்து வந்தவர்களை பரிசோதிக்கும்போது தொற்று இல்லை என்று அனுப்பப்பட்டவர்களுக்கு இப்போது தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. காரணம் தொற்றுக்கான அறிகுறி தெரிந்தபின்பு ரத்த மாதிரி எடுத்து ஆய்வு செய்தால் மட்டுமே உண்மைத்தன்மையை அறியமுடிகிறது..அப்படி அறிகுறிகள் தெரியவே 10 நாட்கள் கடக்க வேண்டிய உள்ளது. பிப்ரவரி முதல் தேதிக்கு பிறகு வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் பட்டியல் தயாரித்து அவர்களை தனிமைப்படுத்துவது மட்டுமல்லாமல் நோய்தொற்று சுய தடைக்காப்புக் தயார்படுத்தப்படுகிறார்கள் .

மீண்டும் ரத்த மாதிரி பரிசோதனை

வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் இடைப்பட்ட காலத்தில் சென்ற இடங்களில் நோய் பாதிப்பு கண்டறியப்பட்டு ,நோய் பரவல் முதல் நிலையிலேயே தடுக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கொரானதாக்கியவர்களுக்கு உடனடியாக அறிகுறிகள் தெரியாமல் இருப்பதால் திரள் கண்காணிப்பை தீவிரப்படுத்தி பெருமளவில் தரவுகள் சேகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழக சுகாதாரத்துறைக்கு நன்றி பாராட்டு

தமிழக முதலமைச்சர் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் இயக்கத்தில் அனைத்து துறை அதிகாரிகளும் போர் தந்திரத்தோடு களத்தில் கால்கடுக்க பணியாற்றி வருகின்றனர் . தமிழக மக்களை வீட்டைவிட்டு வெளியே வராமல் பாதுகாப்பதில் காவல் துறையின் துரித நடவடிக்கைகள் மிகப்பெரிய சவால்களை சந்தித்து வருகிறது .இவர்களுடைய வேகம் மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட அதிகாரிகளை உறக்கமின்றி பணியாற்ற உந்துசக்தியாக அமைகிறது. மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரிகள் மாவட்ட வட்டார அளிவில் மேற்கொள்ளும் ஆய்வுகளுக்கு மக்கள் மதிப்பளித்தால் நிச்சயமாக தமிழகத்தில் வைரஸ் மூன்றாம் நிலையை அடையாமல் இரண்டாம்நிலையிலே முடிந்துவிடும். இந்த விஷயத்தில் தமிழக மக்கள் அரசின் வேகத்தை அலட்சியபடுத்தாமல் முரண்டுபிடிக்காமல் நன்றி பாராட்டி அவர்களோடு ஒத்துழைத்து நடைபோடுவோம் .

About Author

error: Content is protected !!