June 22, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

தொண்டருக்கு சீட் கொடுத்து அழகு பார்த்த கேப்டன்

உணமையான ரசிகனுக்கு கேப்டன் வழங்கிய, ‘சீட்’.
அ.தி.மு.க.கூட்டணியில், தே.மு.தி.க.,விற்கு, வடசென்னை ,திருச்சி ,கள்ளகுறிச்சி விருதுநகர் என , நான்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.
இதில், விருதுநகர் தொகுதியில், விஜயகாந்த் மனைவியும், பிரேமலதா போட்டியிடுவார் என, எதிர்பார்கப்பட்ட நிலையில் . 32 ஆண்டுகளாக, தனது மன்றம் மற்றும் கட்சியின் தீவர தொண்டரான, அழகர் என்ற அழகர்சாமிக்கு, ‘சீட்’ வழங்கியுள்ளார் கேப்டன் .

விஜயகாந்த் தந்தை பெயர் அழகர்சாமி எனவே அழகர் விஜயகாந்த் மனதில் பளிச்சென ஒட்டியிருப்பார் வேட்பாளர் அழகர்சாமி, 15 வயது முதல், சீறும் சிங்கங்கள் விஜயகாந்த் என்கிற நற்பணி மன்ற துணை தலைவராக இருந்து வருகிறார்.கடந்த, 1991- 92ல் ஆண்டு அரசு பஸ் கண்டக்டராக பணியில் இருந்த போது, அங்கும் விஜயகாந்த் மன்றத்தை துவக்கியுள்ளார்,தேமுதிகவை விஜயகாந்த் துவக்கிய போது, மேடையில் அவருக்கு, செங்கோல், கிரீடம் அணிவித்து வியப்பில் ஆழ்த்தினார்.இதனால், அழகர்சாமியின் மனைவி சாமுண்டேஸ்வரியை, 2006 சட்டசபை தேர்தலில், திருமங்கலம் தொகுதியில் போட்டியிட விஜயகாந்த் உத்தரவிட்டார்.அழகரும் தொடர்ந்து லோக்சபா, சட்டசபை தேர்தல்களில், ‘சீட்’ கேட்டு வந்துள்ளார். அதன்படி, தற்போதைய லோக்சபா தேர்தலில் போட்டியிடவும், சீட் கேட்டிருந்தார்.உணமையான தொண்டருக்கு கிடைத்த பரிசாக தேமுதிக தொண்டர்கள் குஷியில் உள்ளனர்

About Author

error: Content is protected !!