March 3, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

பழனி மலை

தைப்பூச நாளில் பள்ளிகள் செயல்பட உத்தரவு

கல்வித்துறை காலண்டரில் வாரவிடுமுறையாக குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், தைப்பூசமான நாளை (8ம் தேதி) பள்ளிகள் செயல்பட உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் எஸ்எஸ்எல்சி, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான ஆண்டுபொதுத்தேர்வு அடுத்த மாதம், முதல் வாரத்தில் தொடங்குகிறது. தற்போது பிளஸ் 2 வகுப்புகளுக்கு செய்முறைத் தேர்வும், பிளஸ் 1 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வும் நடந்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் நாளை தைப்பூச விழா கொண்டாடப்படுகிறது. முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாட்டிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, நாளை சனிக்கிழமை வாரவிடுமுறை நாளாகும். மேலும், தைப்பூசத்தை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், சேலம் மாவட்டத்தில், பள்ளி மாணவர்களுக்கு தேர்வு நடைபெறும் எனவும், பள்ளிகள் செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ஆசிரியர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூறியதாவது:

பழனி மலை

தைப்பூச திருவிழா முக்கிய இந்துக்கள் பண்டிகைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. நடப்பு கல்வியாண்டிற்காக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள ஆண்டு காலண்டரில், நாளை சனிக்கிழமையை முன்னிட்டு வாரவிடுமுறை நாளாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு பல மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், சேலம் மாவட்டத்தில் நாளை பிளஸ் 2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வும், பிளஸ் 1 மாணவர்களுக்கு கணினி அறிவியல் தேர்வு மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு சமூக அறிவியல் தேர்வும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, மற்ற வகுப்பு மாணவர்களுக்கும், நாளை பள்ளி வேலைநாளாக செயல்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், தைப்பூசத்தை முன்னிட்டு பழனி உள்பட பல்வேறு கோயில்களுக்கு செல்ல திட்டமிட்டிருந்த மாணவர்களும், ஆசிரியர்களும் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.

அதே சமயம், ஆசிரியர்கள் பலர், கோயிலுக்கு செல்ல விருப்பம் தெரிவித்து, நாளை விடுமுறை வேண்டும் என தலைமை ஆசிரியர்களிடம் வலியுறுத்தி வருகின்றனர். இதனால், போதுமான ஆசிரியர்கள் இன்றி, தேர்வுகளை எவ்வாறு நடத்துவது என தெரியாமல் தவித்து வருகிறோம். ஏற்கனவே, மாநில அளவில் நடந்த அடைவுத்தேர்வும், சேலம் மாவட்டத்தில் திருப்புதல் தேர்வும் ஒரேநாளில் வைக்கப்பட்டதால், பல்வேறு சிக்கல்களை சந்திக்க நேர்ந்தது. தற்போது, தைப்பூச நாளில் தேர்வு வைப்பதும் சிரமமான ஒன்றாகும். எனவே, இனிவரும் காலங்களிலாவது, தேர்வு அட்டவணை தயாரிக்கும் போது, கல்வித்துறை காலண்டர் மற்றும் விஷேச தினங்களை, அதிகாரிகள் கவனத்தில் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

நன்றி -தினகரன்

About Author

error: Content is protected !!