May 18, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

தேர்தல் செலவுக்கு தனது பென்சனை தர முன்வந்த ஆசிரியர் எம்.எல்.ஏ கண்ணீர்

நாங்குநேரி தொகுதியில் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சியில் கற்றுக் கொடுத்த ஆசிரிரை நினைத்து அழுத எம்.எல்.ஏ.

தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட ரெட்டியார்பட்டி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் வைத்து நடைபெற்றது. பள்ளி தமிழாசிரியர் சக்தி ராசு வரவேற்புரையாற்றினார். பள்ளி தலைமை ஆசிரியர் சிவராஜ் தலைமை தாங்கினார்.

சிறப்பு விருந்தினராக நாங்குநேரி சட்டமன்ற அதிமுக உறுப்பினர் ரெட்டியார்பட்டி நாராயணன் கலந்துகொண்டு 44 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசும் போது நான் நாங்குநேரி சட்டமன்ற இடைத் தேர்தலில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு இருந்தேன். 3ம் நாள் பிரச்சாரத்திற்காக நான் காலையிலேயே எழுந்து புறப்பட்டபோது என்னை பார்ப்பதற்காக வயதான ஒருவர் என் வீட்டின் வெளியே நின்றுள்ளார். என்னுடைய உறவினர்கள் அவரை விசாரித்த போது நான் அவருக்கு கற்று கொடுத்த ஆசிரியர் என்று கூறுங்கள் என்று சொல்லி இருக்கிறார். உடனே நான் ஓடிச் சென்று அவரை உள்ளே அழைத்து பேசிக் கொண்டு இருந்தேன். அப்போது அவர் என்னிடம் நாராயணன் நீ படிக்கும் போதே எப்படி கஷ்டப்பட்டாய் என எனக்கு தெரியும். இப்போது சட்டமன்ற இடைத் தேர்தலில் நிற்கிறாய். எனவே எனது 1 மாத பென்சன் பணத்தை உன் தேர்தல் செலவுக்கு வைத்துக் கொள் என்று கூறி பணத்தை தந்தார். அப்படி பட்ட ஆசிரியர் பயிற்று வித்த பள்ளியில் படித்த நான் இப்போது உங்கள் முன் எம்.எல்.ஏ ஆக வந்து நிற்கிறேன். என்று கூறி கண் கலங்கினார்.
உடற்கல்வி ஆசிரியர் ஹில்டா பொன்மனி நன்றி கூறினார். இந்த நிகழ்ச்சியில் பாளை ஒன்றிய செயலாளர் மருதூர் ராமசுப்பிரமணியன், ரெட்டியார்பட்டி ஊராட்சி செயலாளர் மணி பிள்ளை, சிறுமளஞ்சி சிவா, ஒன்றிய பொருளாளர் நாராயணன், முத்துக்குடி பாண்டியன், சகாயராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தி :- டேவிட் ராஜா திருநெல்வேலி

About Author

error: Content is protected !!