March 3, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

தேமுதிக சார்பில் மதுரையில் உலக மகளிர் தின பொதுக்கூட்டம்

தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவர கழக பொதுச்செயலாளர் கேப்டன் விஜயகாந்த் மகளிர் தினத்தை முன்னிட்டு இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்

உலக மகளிர் தின பொதுக்கூட்ட அறிவிப்பு பெண்கள் நாட்டின் கண்கள் திட்டத்தை உறுதியுடன் தொடரவும், பெண்களின் நலனையும், பெருமையையும், பாதுகாப்பையும் காத்திடவும், பெண்களுக்கு சம உரிமை வழங்கிடுவோம் என்ற முழக்கத்துடன் வருகின்ற 08.03.2020 ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில், மதுரை ஒருங்கிணைந்த மாவட்ட கழகத்தின் சார்பாக, திருப்பரங்குன்றத்தில், பதினாறுகால் மண்டபம் பகுதியில் மாபெரும் மகளிர் தின பொதுக்கூட்டம் நிறுவனத்தலைவர், பொதுச்செயலாளர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ளது. கழக பொருளாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார். இக்கூட்டத்தில் தலைமை கழக நிர்வாகிகளும், மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூராட்சி, வார்டு, ஊராட்சி, கிளை கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் கலந்துகொள்கின்றனர். பெண்ணினம் காக்க, மடைதிறந்த வெள்ளம் போல், முரசு கொட்டி ஆர்ப்பரித்து மகளிர் அணியை சார்ந்த தாய்மார்களும், சகோதரிகளும், பொது மக்களும் பெருந்திரளாக வருகை தந்து இக்கூட்டத்தை வெற்றிபெற செய்ய வேண்டுகிறேன்.என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்

About Author

error: Content is protected !!