May 21, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

தேமுதிக., சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் இன்று நேர்காணல்

பாராளுமன்ற தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் இன்று நேர்காணல் நடைபெறுகிறது.

பாராளுமன்ற தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் விஜயகாந்த் தலைமையில் இன்று நேர்காணல் நடைபெற இருக்கிறது என தேமுதிக தலைமைகழக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 4 தொகுதிகள், ஒதுக்கப்பட்டுள்ளது.
பல கட்ட இழுப்பறிக்கு பின்னர் அதிமுக கூட்டணியில் தேமுதிக இணைந்தாலும், மக்களவைத் தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்தவர்களிடம் இருந்து விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வந்தன. இந்நிலையில், விருப்ப மனு அளித்தவர்களிடம், கட்சித் தலைவர் விஜயகாந்த் முன்னிலையில் இன்று நேர்காணல் நடைபெறுகிறது.
விருப்ப மனு அளித்தவர்கள் நேர்காணலுக்கு வரும்போது கட்சி உறுப்பினர் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, கல்விச் சான்றிதழ், தனித் தொகுதிக்கு ஜாதி சான்றிதழ் ஆகியவற்றின் நகலை கண்டிப்பாக கொண்டு வர வேண்டும் என்று தேமுதிக தெரிவித்துள்ளது

About Author

You may have missed

error: Content is protected !!