June 22, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

தேசத்தின் உயிர்களை உறுதிசெய்ய உயிரியல் போருக்கு தயாராகும் மத்திய – மாநில அரசுகள் கல்வியாளர்இராஜசேகரன்

கல்வியாளர் ,சமூக ஆர்வலர் , சுய முன்னேற்ற பயிற்சியாளருமான க.இராஜசேகரன்  கொரோனா தொற்றின் பாதிப்பு குறித்து  இக்கட்டுரையில் விவரித்துள்ளார் தேசத்தின் உயிர்களை உறுதிசெய்ய உயிரியல் போருக்கு தயாராகும் மத்திய – மாநில அரசுகள் !!

தலைமுறைக்கு மகாத்தான சவாலாக விளங்கும் கொரானா சுகாதார நெருக்கடியை ஏற்படுத்திவிடாமல் தடுக்க மத்திய , மாநில அரசுகள் விரிவான மருத்துவப் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தி உள்ளன . தும்மல் ,சனி ,இருமல் ,காய்ச்சல் என நடைமுறை உடல் உபாதைகளை கண்டாலே கதிகலங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

கண்ணுக்கு எட்டிய தூரத்தில் சமூகப் பரவல்

இந்தியாவில் அங்கொன்றும் இங்கொன்றுமாக தென்பட்ட அறிகுறிகள் கண்ணுக்கெட்டிய தூரத்தில் படர தொடங்கி விட்டது. தென் கொரியா ,ஜப்பான் போன்ற நாடுகளில் அந்த நாடுகளின் மரபு வழி கசாயங்களை பருகியதால் மக்களின் நோய் எதிப்பாற்றல் ஏற்றம் பெற்றுள்ளதாகவும் மனம் உளவியல் உறுதியை வென்றதாக விபரங்களும் , வியூகங்களும் நம்மை வந்து அடைந்திருக்கின்றன.

ஆயுஷ் மருத்துவர்கள் கலந்துரையாடல்

பாரம்பரிய இந்திய மருத்துவமுறைகளான சித்தா ,ஆயுர்வேதா ,யுனானி ஓமியோபதி மருத்துவ நிபுணர்களையும் சந்தித்து நம் பாரத பிரதமர் ஆலோசனை கேட்க முடிவு செய்ததன் அடிப்படையில் தொலைபேசி கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டது.கொரானா வைரஸ் உறுதி செய்யப்படவர்கள் ,தனிமைப்படுத்தியவர்கள் தவிர அனைவருக்கும் நிலவேம்பு கஷாயமும் ,கபசுர குடிநீரும் பருக அறிவுறுத்தலாம் . இதனால் எதிப்பாற்றல் வலுவடையும் என பரிந்துரைக்கப்பட்டது. இந்திய முழுவதும் உள்ள இந்திய முறை மருத்துவர்கள் கசாயம் பற்றிய புரிதலை மக்களிடம் எடுத்துக்செல்லுங்கள் என பிரதமர் அறிவுறுத்தி உள்ளார். மக்களும் கசாயத்தை தேடத்தொடங்கிவிட்டனர்.

உயிரியல் போர் (. Biological War. )

ஜான் ஹாப்கின்ஸ் பல்கலை தந்த அதிர்ச்சி அறிக்கை படி இந்தியாவில் 25 கோடிமக்களுக்கு தொற்று பரவலாம் அதில் 25 லட்சம் பேர் தீவிரநோயால் பாதிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நிச்சயமற்ற சூழல்களில் கடுமையான முடிவுகள் எடுக்க வேண்டுமென்பதால் மத்திய மாநில அரசுகள் ஆயத்த நடவடிக்கைகளில் இறங்கி உள்ளன. காரணம் மதுரையில் கொரனாவைரஸ் தாக்குதல் உயிரிழந்தவரின் மகனுக்கு அப்போது ரத்த மாதிரி ஆய்வில் அறிகுறிகள் இல்லை என்று அறியப்பட்டது. 10 நாட்கள் கழித்து இன்று செய்யப்பட்ட ரத்த மாதிரியில் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதே நிலை இந்தியாவில் பல மாநிலங்களில் தொடர்கிறது.. சென்னையில் புரசைவாக்கம் ,விருகம்பாக்கம் ,அரும்பாக்கம் ,நுங்கம்பாக்கம் ,சைதாப்பேட்டை ,சாந்தோம் ,போரூர் ,ஆலந்தூர் ,கோட்டூர்புரம் ,மேற்க்கு மாம்பலம் உள்ளிட்ட பகுதிகள் சுகாதாரத்துறையின் தீவிர கண்காணிப்பில் உள்ளது. இது போல் தமிழகத்தின் உள்மாவட்டங்களில் பல பகுதிகளில் தீவிர கண்காணிப்பு தொடர்கிறது .இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சில் ( ICMR ). மருத்துவர்கள் ,மருத்துவமனைகள் ,உபகர்ணங்கள் கட்டமைக்கும் பணிகளை இந்திய முழுவதும் பரவலாக உருவாக்கி வருகிறது.

வெண்டிலேட்டர்கள் அதிகம் தேவை

கொரானா தாக்குதலின் பிரதான இலக்கு சுவாச மண்டலத்தை பாழ்படுத்துவது தான். தொற்று உறுதியான பின் பாதிக்கப்பட்ட மூன்றில் ஒருவருக்கு மூளையால் சுவாசத்தை கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்படுவர். சுவாசப் பிரச்சனையை சரி செய்ய தொடர்ந்து 21 நாட்கள் வென்டிலேட்டர் உதவியுடன் படுக்கையில் இருந்தால் உயிர் பிழைக்க வழி கிடைக்கும்.பாளையம் கோட்டை ( ஹைகிரவுண்டு ) பழமையான பிரதான அரசு மருத்துவமனையில் இயங்கும் நிலையில் மிகக்குறைவாக இரண்டு வெண்டிலேட்டர்கள் உள்ளன. இதே நிலை தான் தமிழகத்தின் பல மருத்துவமனைகளிலும் ஏனெனில் அதிக தேவைக்கான சூழல் ஏற்படவில்லை. வெண்டிலேட்டர் தயாரிப்பில் கவனம் செலுத்த வேண்டிய நெருக்கடிநிலை ஏற்ப்பட்டுள்ளது. இந்தியாவில் உயிரியில் போர் நடத்த வேண்டிய சூழல் உருவானால் 40 லட்சம் வெண்டிலேட்டர் தேவைப்படும் ஆனால் நம்மிடம் இருப்பது 40 ஆயிரம் மட்டுமே. தமிழ்நாட்டில் 2300 கேரளாவில் 5000 என இந்தியாவில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலே உள்ளன. அதிலும் 75 சதவிதம் இறக்குமதி செய்யப்பட்டவை. அவசரத்தேவையை கருத்தில் கொண்டு மத்திய அரசின் பாதுகாப்பு மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள் மூலம் 40,000 வெண்டிலேட்டர்கள் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளன.

அடிப்படை தேவை

கொரான வைரஸ் உறுதிசெய்யப்பட்ட நோயாளிகளுக்கு உடனடித் தேவை ரத்த மாதிரி பரிசோதனை ,வெண்டிலேட்டருடன் கூடிய படுக்கை ,முகத் கவசம் ,கிருமிநாசினி மற்றும் ஆண்டிபயாட்டிக் மாத்திரைகள். தமிழக அரசு அவசர தேவைகருதி தர்மபுரி ,திருச்சி உள்ளிட்ட பல இடங்களில் கல்லூரிகளை மருத்துவமனைகளாக மாற்றும் பணி விரைவாக நடைபெற்று வருகிறது .

ஆறுதலான விஷயம்

ஏப்ரல் 14 ம் தேதிக்கு பிறகு நாடு முழுவதும் ஊரடங்கை நீட்டிக்கும் திட்டம் தற்போது இல்லையென மத்திய அரசு அறிவித்து இருப்பது ஆறுதலான விஷயம். சைனாவில் வைரஸ் பாதிப்பின்போது துல்லிய தகவல்களை வெளியிட்ட ஸ்டான்போர்ட் பல்கலைகழக உயிர் இயற்பியலாளர் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி மைக்கேல் லெவிட் கொரானா வைரஸ் தொற்றின் முடிவு நெருங்கிவிட்டது என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

கசியும் தகவல்கள்

 

கொரனாவைரஸ் தற்போது 14 மாவட்டங்களில் பரவத்தொடங்கி உள்ளது அதிகபட்சமாக ஈரோட்டில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. வைரஸ் பரவல் ஒருவருக்கொருவர் என்ற நிலையில் இருந்து சமூக பரவல் நிலைக்கு நகர்ந்து வருவதாக மாநிலங்களிலிருந்து மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இந்த தகவலை உறுதிப்படுத்தும் வகையில் தமிழ்நாட்டில் இருந்து டெல்லியில் மலேசியா மற்றும் இந்தோனேசியா மத போதகர்கள் கலந்துகொண்டகூட்டத்துக்கு சென்ற 1500 பேர் கொரானா வைரஸ்ஸை தமிழகத்துக்கு கொண்டு வந்து விட்டனர். தமிழகம் திரும்பிய 1500 பேரில் 989 பேர் அடையாளம் கண்டு தனிமைப்படுத்தியதில் 14 பேருக்குவைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.இன்னும் அடையாளப்படுத்தப்படாத 519 நபர்கள் எங்கு திரிந்து யாரை பாதிக்க செய்தார்களோ என்பதே அரசின் அவசர கவலையாக உள்ளது.கூட்டம் நடந்த 12 நாட்கள் கழித்தே அறிகுறிகள் தென்படுவதால் நிலமையை புரிந்து வீட்டுக்கு உள்ளேயே இருங்கள் என இருகரம் கூப்பி வணங்குகிறேன் .


லட்சமண ரேகையை மதிக்க நாம் மிச்சமிருக்கவேண்டும்

 

 

க.இராஜசேகரன்

கல்வியாளர் ,ஊடகவியாளர்,சுய முன்னேற்ற பயிற்சியாளர் ,பிரபல நிறுவனகளின் மனித வள மேம்பாட்டு ஆலோசகர் ,மற்றும் சமூக ஆர்வலர்

About Author

error: Content is protected !!