February 24, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

தென்காசி – வறுமையின் கோரப்பிடியில் மூவர் தற்கொலை

தென்காசி மாவட்டம் கட்டளை குடியிருப்பு பகுதியில் கந்தசாமி என்ற ஆட்டோ ஓட்டுனர் தூக்கில் தற்கொலை அவரது வீட்டில் அவரது மகன் மனைவி உடல் பிணமாக மீட்பு மற்றொரு மகன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி
தென்காசி மாவட்டத்தில் கட்டளை குடியிருப்பு பகுதியில் வறுமை காரணமாக மனைவி விஷ மருந்து சாப்பிட்டுள்ளார். குழ்ந்தையை கழுத்தை நெரித்து கொன்று தூக்கில் தொங்கி ஆட்டோ டிரைவர் கந்த சாமி தற்கொலை செய்துள்ளார்.
இன்று காலை கந்தசாமி என் வீட்டு கதவு பூட்டி இருந்த நிலையில் உறவினர்கள் அதிக நேரம் கதவு திறக்கப்படாததால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர்.
அப்போது கந்த சாமி தூக்கில் தொங்கிய நிலையில் அருகே அவர் மனைவி இரத்தம் கக்கிய நிலையில் இறந்த நிலையிலும் மூத்தமகன் சின்முத்திரன் இறந்து கிடந்துள்ளான். இந் நிலையில் சுவற்றில் எங்கள் சாவிற்கு வறுமை தான் காரணம் என எழுதி இருந்தது.

இதனை தொடர்ந்து காவல்துறை தகவல் அளிக்கப்பட்டு காவல்துறையினர் விசாரணையில் நடத்தி வருகின்றனர். இன்னொரு மகன் ஏகாந்த மூர்த்தி என்ற 2 வயது சிறுவன் மட்டும் வீட்டிற்குள்ளிருந்து உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வறுமையின் காரணமாக தென்காசி மாவட்டத்தில் நடந்த முதல் தற்கொலை இது , இதுவே உலகில் வறுமையின் கடைசி தற்கொலையாக இருக்கட்டும்

About Author

error: Content is protected !!