June 17, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

தென்காசி மாவட்டம் பத்திரப்பதிவில் முறைகேடுகள் மாவட்ட பதிவாளர் சஸ்பெண்ட்

தென்காசி மாவட்டம் முழுவதும் பத்திரப்பதிவில் முறைகேடுகள்பல கோடி ரூபாய் சுருட்டல்மாவட்ட பதிவாளர் சஸ்பெண்ட்

தென்காசி மாவட்ட பத்திரப்பதிவு அலுவலகங்களில்  பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக பல்வேறு புகார்கள் வந்த நிலையில் தென்காசி மாவட்ட பதிவாளர் சுப்பிரமணியன் என்பவரை தமிழக பத்திரப் பதிவுத்துறை தலைவர் ஜோதி நிர்மலா சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.

தென்காசி மாவட்ட பதிவாளராக பணியாற்றி வருபவர்  சுப்பிரமணியன் இவர் இம்மாத இறுதியில் ஓய்வு பெற உள்ளார்.

இந்நிலையில் நேற்று தமிழக பத்திரப் பதிவுத்துறை தலைவர் ஜோதி நிர்மலா மாவட்ட பதிவாளர் சுப்பிரமணியனை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.

இவர் திருச்சி மாவட்ட பத்திரப்பதிவு அலுவலராக பணியாற்றிய காலத்தில் பல்வேறு முறைகேடான செயல்களில் ஈடுபட்டதாக பல்வேறு புகார்கள் வந்துள்ளது மேலும் இவர் தென்காசி மாவட்ட பதிவாளராக செயல்பட்ட பணி காலத்தில் தென்காசி மாவட்டத்திற்கு உட்பட்ட தென்காசி செங்கோட்டை இடைகால் கடையநல்லூர் பாவூர்சத்திரம் ஆலங்குளம் சுரண்டை வாசுதேவநல்லூர் சிவகிரி மேலநீலிதநல்லூர் கரிவலம்வந்தநல்லூர் உள்ளிட்ட 17 சார்பதிவாளர் அலுவலகங்களிலும் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளது.

மேற்கண்ட 17 சார்பதிவாளர் அலுவலகங்களிலும் பணியாற்றும் சார்பதிவாளர்கள் இவரது உத்தரவுப்படி முறைகேடான,  அரசு விதிமுறைகளுக்கு மாறாக பத்திரப்பதிவு செய்ய மறுத்தால் அவர்களை லீவில் போகும்படி கட்டாயப்படுத்தி அனுப்பிவிட்டு அந்தப் பதவிக்கு தனக்கு வேண்டிய அலுவலரை பொறுப்பாளராக அனுப்பி அவர் மூலமாக பல்லாயிரக் கணக்கான பத்திர பதிவுகளை அரங்கேற்றம் செய்துள்ளார்.

தென்காசி மாவட்டத்தில் ஒவ்வொரு சார்பதிவாளர் அலுவலகத்திலும் நாளொன்றுக்கு காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையில் சராசரியாக அதிகப்பட்சமாக 20 பத்திரங்கள் மட்டுமே பதிவு செய்யப்படும். ஆனால் இந்த மாவட்ட பதிவாளர் சுப்பிரமணியனின் கட்டாய உத்தரவுக்கு  கீழ்படிந்து அந்த சார்பதிவாளர் விடுமுறையில் சென்ற பின்பு இவர் நியமிக்கும் அலுவலர்  சார்பதிவாளராக  பொறுப்பேற்றுள்ள   காலங்களில் தென்காசி மாவட்டத்திலுள்ள ஒவ்வொரு சார்பதிவாளர் அலுவலகத்திலும் காலை 10 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரையிலும் நாளொன்றுக்கு  நூற்றுக்கும் அதிகமான பத்திரங்கள் பதிவாகியுள்ளது என்பதை உயர் அதிகாரிகள் ஆய்வு செய்தால் அதன் மூலம்  தெரிந்து  கொள்ளலாம்..

அரசு விதிமுறைகளின்படி அங்கீகரிக்கப்படாத வீட்டுமனைகளை பத்திரப்பதிவு செய்ய சட்டத்தில் இடம் இல்லை. ஆனால் தென்காசி மாவட்ட பதிவாளர் சுப்பிரமணியன் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி தென்காசி மாவட்டம் முழுவதும் உள்ள 17 சார்பதிவாளர் அலுவலகங்களிலும் அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகள் ஏராளமாக பத்திர பதிவு செய்யப் பட்டுள்ளது. இதற்காக பல கோடி ரூபாய் லஞ்சமாக பெறப்பட்டுள்ளது.

மேலும் ஒருவர் காலி மனையை  பிளாட் போட்டு விற்பனை செய்தால் ஒரு ஏக்கருக்கு 30 சென்ட் இடத்தை அரசு பெயருக்கு எழுதிக் கொடுக்க வேண்டும். ஆனால் இந்த மாவட்ட பதிவாளர் சுப்பிரமணியனின்  சிபாரிசில் நடைபெறும் பத்திரப்பதிவுகளில்  அதுபோன்ற அரசின் விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுவது கிடையாது. அரசுக்கு எழுதிக் கொடுக்க வேண்டிய 30 சென்ட் இடத்திற்கான தொகை முழுவதையும் மாவட்ட பதிவாளர் சுப்பிரமணியன் கணக்கிட்டு பெற்றுக்கொண்டுள்ளார் .

இதற்கெல்லாம் சிகரம் வைத்தது போல் தென்காசி மாவட்டம் சுரண்டை காவல் நிலையத்திற்கு சொந்தமான இடத்தை சுரண்டை பத்திரப்பதிவு அலுவலகத்தில் சார் பதிவாளரை விடுமுறையில் அனுப்பிவிட்டு தனக்கு வேண்டிய  ராஜேந்திரன் என்பவரை சார் பதிவாளராக நியமித்து அவர் மூலமாக சுரண்டை காவல் நிலையத்திற்கு சொந்தமான இடத்தையே  மோசடியாக  தனிநபர்களுக்கு பத்திரப்பதிவு செய்து விற்பனை செய்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்தது.

இது சம்பந்தமாக சுரண்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏழு பேர்களை கைது செய்தனர் அவர்களில் ஒருவர் சுரண்டை சார்பதிவாளர் அலுவலகத்தில் பணி புரியும் அலுவலர் ராஜேந்திரன் என்பவரும் உண்டு .

இந்த வழக்கில் அவர் ஜாமினில் வெளிவந்து தொடர்ந்து சுரண்டை சார்பதிவாளர் அலுவலகத்தில் இன்று வரை  பணியாற்றி வருகிறார்.

இவர் மீது துறை ரீதியாக இன்றுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை அதற்கு முழு முதற் காரணமாகவும் அரசு நிலத்தை மோசடியாக  பதிவு செய்த அலுவலர் ராஜேந்திரனுக்கு  எந்த விதமான பாதிப்பும் வராத வகையில் பாதுகாப்பாக இருந்த வரும் மாவட்ட பதிவாளர் சுப்பிரமணியன்  தான் என்றும் தெரியவருகிறது.

தென்காசி மாவட்டத்தில் உள்ள 17 சார்பதிவாளர் அலுவலகங்களிலும் உரிய ஆய்வினை மேற்கொண்டால் பல்லாயிரக்கணக்கான பத்திரப்பதிவுகள் மோசடியாக பதிவு செய்திருப்பது அம்பலமாகிவிடும். தமிழக பத்திரப்பதிவு துறையின் தலைவராக நேர்மையான அதிகாரியாக பெயரெடுத்த ஜோதி நிர்மலா தலைமையில் செயல்பட்டு வரும் பத்திரப் பதிவுத் துறையில் தென்காசி மாவட்டத்தில் நடைபெற்று வருகிற முறைகேடுகள் பற்றி பல்வேறு புகார்கள் சென்னை தலைமை அலுவலகத்திற்கு பொதுமக்கள் அனுப்பிய போதும் அந்தப் புகார்களை தமிழக பதிவுத்துறையில் தலைவரின் பார்வைக்கு கொண்டு செல்லாமல் சிலர் தடுத்து வருவதாகவும் தெரிகிறது.

எனவே  உரிய முறையில் விசாரணை செய்து  தென்காசி மாவட்டத்திலுள்ள 17 சார்பதிவாளர் அலுவலகத்திலும் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தென்காசி மாவட்டத்திலுள்ள 17 சார்பதிவாளர் அலுவலகத்திலும் நடைபெற்றுள்ள பல்வேறு முறைகேடுகள் சம்பந்தமாக தென்காசி மாவட்ட பதிவாளர் சுப்பிரமணியன் அவருக்கு எல்லா வகையிலும் உதவி செய்து  மோசடி பத்திரப்பதிவு களை செய்துவரும் சுரண்டை சார்பதிவாளர் அலுவலக அலுவலர் ராஜேந்திரன் நெல்லை மண்டல பத்திரப்பதிவு துறை துணைத் தலைவர் ஆகியோர் மீது துறைவாரியாக உரிய நடவடிக்கை எடுப்பதோடு சட்டப்படி வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்து உரிய முறையில் விசாரித்தால் தென்காசி மாவட்டத்தில்  இவர்கள் அரங்கேற்றியுள்ள அரசின் விதிமுறைகளுக்கு மாறாக பல்லாயிரக்கணக்கான போலி பத்திர பதிவுகள் முறைகேடான பத்திரப் பதிவுகள் நடைபெற்றுள்ளது அம்பலமாகும் .

இதன் மூலம் இவர்கள் கொள்ளையடித்துள்ள  சொத்துக்களைப் பறிமுதல் செய்தால் அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் என்றும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

தென்காசி மாவட்ட பத்திரிக்கை பதிவாளர் சுப்பிரமணியன்  சஸ்பெண்ட் உத்தரவு பற்றி தகவல் தேரிந்த பொதுமக்களும் பாதிக்கப்பட்டவர்களும் பெரும் மகிழ்ச்சி அடைந்து உள்ளார்கள்.

About Author

You may have missed

error: Content is protected !!