May 18, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

தென்காசி மாவட்டம் குறும்பலாப்பேரியில் கிருமிநாசினி தெளிப்பு

நாடு முழுவதும் கொரொனோ தொற்று பரவுவதை தடுக்க அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது , பொதுமக்கள் கூடும் இடங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பந்தல் அமைத்து தொற்று பரவுவதை தடுக்கும் முயற்சிகள் நடந்து வருகிறது ,மேலும் கபசுரக் குடிநீர் விநியோகம் செய்து வருகின்றனர் இந்நிலையில் தென்காசி மாவட்டம், சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட , குறும்பலாப்பேரியில் கிருமிநாசினி தெளிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர் இதையடுத்து சட்டமன்ற உறுப்பினர் எஸ்.செல்வ மோகன்தாஸ் பாண்டியன் அறிவுறுத்தலின்படி, சுரண்டை தீயணைப்புத்துறை,நிலைய அலுவலர் செல்வராஜ் நிலைய அலுவலர் போக்குவரத்து பாலச்சந்தர்,மாரியப்பன், பாண்டியன், திலகர், உதய பிரகாஷ் ஆகியோர் அடங்கிய குழுவினர் குறும்பலாப்பேரியில் உள்ள, கோவில் ஊராட்சி மன்ற அலுவலகம் ,அம்மன் கோவில் மைதானம் உள்ளிட்ட அனைத்து தெருக்களிலும் தீயணைப்பு வாகனம் மூலம் கொரோனா கிருமிநாசினியை தெளித்தனர் , இதில் கீழப்பாவூர் அதிமுக ஒன்றிய செயலாளர் அமல்ராஜ் குணசீலன் ஆகியோர் கலந்து கொண்டனர்

About Author

error: Content is protected !!