February 28, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

தென்காசி மாவட்டம் உற்சாகத்தில் மக்கள்

திருநெல்வேலி மாவட்டத்தைப் பிரித்து 110 விதியின் கீழ் தென்காசியை மாவட்டமாக சட்டசபையில் அறிவித்தார்,இதையடுத்து தென்காசி மற்றும்
அதைச் சுற்றியுள்ள தென்காசி மாவட்டத்திற்கான வரையறையை அரசு அறிவிக்கும் முன் அப்பகுதி மக்கள் அவர்களாகவே ஒரு வரையறையை வகுத்து மக்களாகவே ஓரு மாவட்ட எல்கை பிரிக்கும் வேலையில் இறங்கி விட்டனர் இதோ மக்களின் வரையறை

நெல்லை வருவாய் மாவட்டம் பிரிப்பு

வரவேற்போம்தென்காசி புதிய மாவட்டத்தை!|

பத்து சட்டமன்றத் தொகுதிகளுடன்
பெரிய மாவட்டங்களில் ஒன்றான
நெல்லை மாவட்டம் பிரிக்கப்பட்டு;
தென்காசியை தலைமையிடமாகக் கொண்ட புதிய மாவட்டம் பிறந்துள்ள அறிவிப்பை சட்டமன்றத்தில் முதல்வர் எடப்பாடி பழநிசாமி அறிவித்துள்ளார்.பிரிக்கப்பட்ட படி பார்த்தால்

மாவட்டத் தலைநகரங்களான நெல்லையோ,
தென்காசியோ பூகோளப்படி மாவட்டத்தின் மத்தியப் பகுதியில் அமையவில்லை.என்றாலும் மாவட்டப் பிரிப்பு தவிர்க்க முடியாதது .
மக்களுக்கான திட்டங்களை விரைந்து நிறைவேற்றுவதிலும்,மக்களிடம் கொண்டு செல்வதிலும் சிறிய மாவட்ட நிர்வாகங்கள் விரைந்து செயலாற்ற முடியும் என்பதே சரி!16தாலுகாவிற்கு ஒரு கலெக்டர் என்பது,எட்டு அல்லது ஒன்பது தாலுகாவிற்கு ஒரு கலெக்டர் ;
ஒரு டி ஆர்.ஓ.ஒரு எஸ்.பி .அனைத்துத் துறை மாவட்ட அலுவலர் அலுவலங்கள் என்பது நிச்சயம் நலம் பயப்பதே என்பதை மறுக்க முடியாது!

புதிய தென்காசி மாவட்டத்தில்,

தென்காசி, கடையநல்லூர், வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில் மற்றும் ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட தென்காசி, செங்கோட்டை , கடையநல்லூர், ஆலங்குளம், வி.கே.புதூர்,
சிவகிரி, சங்கரன்கோவில், திருவேங்கடம் ஆகிய எட்டு வருவாய் வட்டங்கள், அதற்குட்பட்ட ஒன்றியங்கள் இடம்பெறும் என்று தெரிகிறது!

(ஒரு சில மாற்றங்கள் இருக்கலாம்)

புதிய மாவட்டத்தில் சங்கரன்கோவிலில் கோட்டாட்சியர் (சப் கலெக்டர் )அலுவலகம் அமையும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது!
அதே போல் தென்காசி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக உயரும் போது, மாவட்ட அரசு மருத்துவமனையாக சங்கரன்கோவில் மருத்துவமனை தரம் உயரும் (தூத்துக்குடி மாவட்டத்தில்
கோவில்பட்டியை போல்).
சங்கரன்கோவில் நகரத்திற்கு திருநெல்வேலியை விட தென்காசியே தூரக் கணக்கில் பக்கமாகும்.
(அடுத்து சுமார் 20 ஆண்டுகள் கழித்து நடக்கப் போகும் மாவட்டப் பிரிவினையில் சங்கரன்கோவில் மாவட்டத் தலைநகராகும் வகையில் அனைத்து மூலக்கூறு வசதிகளைக் கொண்டதாக விளங்கும்.
ஆனால் மேலநீலிதநல்லூர் ஒன்றியத்தின் கீழ்பகுதி, குருவிகுளம் ஒன்றியத்தின் கிழக்கு பகுதிக்குநெல்லையை விட தென்காசி சற்று தூரமாக ( 10முதல்25கிமீ )இருக்கும்.
அதை மாற்றி அமைக்க முயன்றால் சங்கரன்கோவில், திருவேங்கடம் தாலுகாவில் இருந்து மானூருக்கோ கோவில்பட்டி தாலுகாவிற்கோ
மாற வேண்டி வரும் அது கூடுதல் குழப்பத்திற்கு வழிவகுக்கும்.
நெல்லை என்ற பெயர் உணர்வுபூர்வமானது.
மறுக்க முடியாது.பிரியும் போது சற்றுக் கவலையாகத் தான் இருக்கிறது!

ஆனால்
நெல்லை,
தூத்துக்குடி,
தென்காசி
மூன்றுமே

நெல்லைச் சீமை
என்கிற
“தென்பாண்டிச் சீமை” தான் என்பதை எந்தப் பிரிவினையாலும் மாற்றிவிட முடியாது!

தவிர,
நெல்லை
R.T.0. அலுவலகம்
இருக்கும் போது
TN 72 என்றால் வாகனங்களுக்கு ஒரு
கெத்து என்று நினைத்த காலம் உண்டு.

பின்னர் தென்காசி
TN 76 ;
சங்கரன்கோவில் TN 79 மாறி விட்டதையும்;

மிக எளிதாக, விரைவாக வாகனப் பதிவு நடப்பதையும்

நன்கு பயன்படுத்திக் கொண்டு தான் வருகிறோம்.

தவிர, எங்கு மாவட்ட தலைநகர் இருந்தாலும் எளிதாகச் சென்றடையும் வகையில் அணுகுச் சாலை வசதிகள் சில ஆண்டுகளில் விரைந்து மேற்கொள்வார்கள்!

தமிழ் வளர்த்த
பொதிகை மலையாம் திருக்குற்றால மலையும்,

மேற்கு தொடர்ச்சி மலைகளும்,காசி விஸ்வநாதர் ஆலையமும்,அன்னை கோமதி ஆலையமும்,விடுதலைப் போரில்முதல் முழக்கமிட்ட
நெற்கட்டும் செவலும்; சிறு தொழில்கள் வளர்ந்து பெருகி
வரும் பாவூர் சத்திரம், சுரண்டை, ஆலங்குளம் கடையநல்லூர்,
இந்தியாவின் புகழ் மிக்க எலுமிச்சை சந்தை புளியங்குடி;
கமகமக்கும் சுல்தான் பிரியாணிதமிழ் வளர்த்த ஊத்துமலை,
கேரளா நுழைவாயில் புளியறை என பல சிறப்புகளை தன்னகத்தே கொண்ட மாவட்டமாக தென்காசி மாவட்டம் புகழுடன் விளங்கும்.
நெல்லையப்பர், தென்னகத்தின் ஆக்ஸ்போர்டு பாளை,
புகழ்மிக்க ஹை கிரவுண்டு மருத்துவமனை, அல்வாகால்டுவெல்லின் இடையன்குடி,தாமிரபரணிநம்பியாறு, வளரும் தொழில் நகரங்கள் வள்ளியூர், திசையன்விளை
அழகிய பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலை ;
ஒரு லட்சம் மீனவர்களைக் கொண்ட கடற்கரை
இணைந்த பகுதிகளாகநெல்லை மாவட்டம் புகழுடன் விளங்கும்.
இரு மாவட்டங்களிலும் எண்ணற்ற புகழ்மிக்க திருக்கோவில்கள், தர்காக்கள், தேவாலயங்களும் உண்டு.
நெல்லை,
தூத்துக்குடி
தென்காசி
மூன்று
மாவட்டங்களுமே
ஒரு வீரத்தாய் பெற்றெடுத்த
மூன்று வீராதி வீர குழந்தைகள் தான்.

வரவேற்போம் புதிய மாவட்டம் தென்காசியை!

About Author

error: Content is protected !!