June 22, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

கீழப்பாவூர் பேரூராட்சி அசத்தல் முயற்சி

தென்காசி மாவட்டத்தின் முதல் கிருமிநாசினி சுரங்கப்பாதை அமைத்து  அசத்தியது கீழப்பாவூர் பேரூராட்சி நிர்வாகம்

நாடு முழுவதும் கொரொனோ பரவலை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு கட்ட முயற்சிகள் எடுத்துவருகிறது மேலும் தமிழ்நாடு அரசு இதற்காக முழுவீச்சில் போராடி வருகிறது தமிழ்நாட்டில் பல இடங்களில் கிருமிநாசினி தெளித்தல் கபசுரக்குடிநீர் ,நிலவேம்பு கசாயம் வழங்கல் போன்ற பல்வேறு கட்ட பணிகளை செய்துவருகிறது இப்பணியில் அரசோடு இணைத்து தனியார் தொண்டு நிறுவனங்கள் , சமூக அக்கறை கொண்ட பொதுமக்கள் ,தன்னார்வலர்கள் இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர் மேலும் அரசு சமூக விலகல் ( social distancing) என்பதை கடைபிடிக்க வலியுறுத்தி வருகிறது

இந்நிலையில் மாவட்ட நிர்வாகத்தின் ஆலோசனையின் பேரில்  தென்காசி மாவட்டத்தின் முதல்கிருமிநாசினி சுரங்கப் பாதை கீழப்பாவூர் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கொரொனோ தொற்று பரவலை தடுக்கும் விதமாக  அமைக்கப்பட்டுள்ளது

இதுகுறித்து பேரூராட்சி செயல் அலுவலர் கண்மணி கூறுகையில்

மாவட்ட நிர்வாகத்தின் ஆலோசனையின் படியும் அறிவுறுத்தலின் படியும் கிருமிநாசினி சுரங்கப்பாதைஅமைக்கப்பட்டுள்ளது  , இங்கு பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் காலையில் மாலை இரு வேளைகளிலும் இதன் வழியே சென்று வர அறிவுறுத்தப் பட்டுள்ளனர்  ,

காலையில் உள்ளே  வந்து பணிக்கு வெளியே  கிளம்பும்போதும்  பணி முடிந்து வீடு  திரும்பும் போதும் இந்த கிருமி நாசினி சுரங்கப்பாதையை படுத்த  சொல்லி இருக்கிறோம் மேலும் பொதுமக்களும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் கூறினார் மற்றும் நாள் தோறும் பணியாளர்கள் வீதி தோறும் , பொதுமக்கள் கூடும் இடங்களில் கிருமி நாசினி தெளித்து வருகின்றனர் ,மற்றும் ஊரடங்கு உத்தரவை யொட்டி  பொதுமக்கள் இருக்கும் இடம் தேடி காய்கறிகள் குறைந்த விலையில் வழங்கப்பட்டு வருகிறது

,விரைவில் அலுவலகம் வரும் நுழைவு வாயிலில் கிருமி நாசினி நடைபாதை அமைக்கப்பட உள்ளது , இதில் கிருமி நாசினி கலந்து தண்ணீர் செல்லும் இதில் காலை நனைந்து விட்டு உள்ளே வரலாம் இதன் மூலமாகவும் தொற்று பரவலை தடுக்க இயலும் மேலும் பொதுமக்கள் பொதுமக்கள் கூடும் இடம் ஊரின் நுழைவாயில் போன்ற இடங்களில் கிருமிநாசினி பாதை அமைப்பது குறித்து தனியார் அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் விரைவில் இதற்கான பூர்வாங்க பணி துவங்கும் என தெரிவித்தார் அப்போது சுகாதார ஆய்வாளர் இசக்கியப்பா உடனிருந்தார்

About Author

error: Content is protected !!