February 22, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

தென்காசி பாராளுமன்ற தொகுதி திமுக பொறுப்பாளராக “கானா ‘

நெல்லையை மாவட்டத்தை சேர்ந்தவர் கருப்பசாமி பாண்டியன், எம்.ஜி.ஆர் காலத்து அரசியல்வாதி 1977 ல் ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினராக தேர்வானவர் அதிமுக மாவட்ட செயலாளர் ஆக இருந்தவர் நெல்லை மாவட்டத்தில் கானா என்றால் தெரியாத ஆளே இல்லை என்று சொல்லும் அளவுக்கு செல்வாக்கு கொண்டவர் .,முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலத்தில் அ.தி.மு.க.வில் துணை பொதுச்செயலாளராக இருந்த போது கட்சியை விட்டு நீக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து அவர் தி.மு.க.வில் சேர்ந்து நெல்லை மாவட்ட செயலாளராகவும், தென்காசியில் எம்.எல்.ஏ.வாகவும் தேர்வு பெற்று பணியாற்றினார்.
இந்த நிலையில் கடந்த 2015ம் ஆண்டு தி.மு.க. உட்கட்சிதேர்தலில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாகவும் ஜெயலலிதா சிறையில் இருந்து வெளியே வந்த போது அவரது ஆதரவாளர்கள் வெடி வெடித்ததால் ஏற்பட்ட பிரச்சினை காரணமாகவும் கருப்பசாமி பாண்டியன் தி.மு.க.வை விட்டு நீக்கப்பட்டார்.
பின்னர் கருப்பசாமி பாண்டியன், ஜெயலலிதாவை சந்தித்து அ.தி.மு.க.வில் இணைந்துகொண்டார் . ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அவருக்கு அ.தி.மு.க. (அம்மா) அணியில் கழக மாநில அமைப்பு செயலாளராக பதவி கொடுக்கப்பட்டது. ஆனால் கருப்பசாமி பாண்டியன் அந்த பதவி தேவையில்லை என்று கூறி அ.தி.மு.க.வில் எந்த அணியிலும் சேராமல் ஒதுங்கி இருந்தார்.
பின்னர் திமுக நிர்வாகிகளை தொடந்து பல நிகழ்வுகளில் சந்திக்க அவர் திமுகவில் இணைவது உறுதி ஆனது அப்போது முன்னாள் முதல்வர் கலைஞர் மருத்துவமனையில் இருந்ததால் இணைப்பு தள்ளிப்போக ஒருவழியாக அறிவாலயம் சென்று மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் தற்போது அவருக்கு தென்காசி பாராளுமன்ற தொகுதியின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்

About Author

error: Content is protected !!