May 21, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

தென்காசி தனி மாவட்டம் முதல்வர் உறுதி -எம்.எல்.ஏ., செல்வமோகன் தாஸ் பாண்டியன் தகவல்

தென்காசி தனி மாவட்டமாக விரைவில் அறிவிக்கப்படும் என முதல்வர் உறுதி அளித்துள்ளதாக செல்வமோகன்தாஸ்பாண்டியன் எம்.எல்,ஏ. தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
2016ஆம் ஆண்டு நடைபெற்ற தென்காசி சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட நான் தேர்தல் வாக்குறுதியாக தென்காசியை தலையிடமாக கொண்டு தனி மாவட்டம் இராமநதி -ஜம்புநதி இணைப்பு கால்வாய் திட்டப்பணி நிறைவேற்றுதல், சுரண்டை செண்பககால்வாய் திட்டப்பணி, இரட்டைகுளம்-ஊத்துமலை கால்வாய் பணி போன்ற முக்கிய பணிகளை நிறைவேற்றி தருவேன் என உறுதியளித்திருந்தேன்.

தேர்தலில் வெற்றி பெற்றவுடன் நடைபெற்ற முதல் சட்டப்பேரவை கூட்டத்தில் எனது முதல் கோரிக்கையே தென்காசியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிடம் வேண்டுகோள் விடுத்து பேசினேன். அதற்கு பதிலளித்த வருவாய்த்துறை அமைச்சர் உதய குமார் அவர்கள் இது பற்றி முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச்சென்று பரிசீலிப்பதாக உறுதியளித்தார்.

அதன் பிறகு 2017, 2018ம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடர்களில் தென்காசியை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் உருவாக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துக்கூறியதுடன், அதற்கான அனைத்து கட்டமைப்பு வசதிகளும் தென்காசிக்கு உள்ளதையும் பட்டியலிட்டு தொடர்ந்து வலியுறுத்தி வந்தேன்.தற்போது கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்ட அறிவிப்பு வெளியான பிறகு முதல்வரை நேரில் சந்தித்து, தென்காசி தனி மாவட்டமாக மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட இருந்ததை சுட்டிக்காட்டியதுடன், விரைவில் அறிவிக்க வேண்டுமெனவும் வேண்டுகோள் விடுத்தேன். அதற்கு பதிலளித்த முதல்வர், திருநெல்வேலி மாவட்டத்தை இரண்டாக பிரித்து, தென்காசியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்குவதற்கான சாத்தியகூறுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டு அறிக்கை அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், அறிக்கை கிடைத்தவுடன் விரைவில் தனி மாவட்ட அறிவிப்பு வெளியாகும் என உறுதியளித்துள்ளார். எனவே அடுத்த சட்டப்பேரவை கூட்டத்தொடரிலேயே தனி மாவட்ட அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது. இதே போல் இராமநதி -ஜம்புநதி இணைப்பு கால்வாய் திட்டப்பணிகளை பொறுத்தவரையில் பணி துவங்குவதற்காக இறுதிக்கட்ட பணிகள் நிறைவு பெற்று விட்டது. மிக விரைவில் இதற்கான நிர்வாக அனுமதி கிடைத்து விடும்.இதே போல் சுரண்டை செண்பககால்வாய் திட்டத்திற்கு மதிப்பீடு தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. சுரண்டை இரட்டைகுளம்-ஊத்துமலை கால்வாய் பணிக்கு வரும் நிதியாண்டில் அடிப்படை பணிகள் துவங்கப்படும்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

About Author

You may have missed

error: Content is protected !!