May 18, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

தென்காசி – சாலை பாதுகாப்பு வார விழா ஓட்டுனர்களுக்கு மருத்துவ பரிசோதனை

சாலை பாதுகாப்பு வார விழாவில் பள்ளி பேருந்து ஓட்டுனர்களுக்கு பொது உடல் பரிசோதனை   நடத்தப்பட்டது.
தமிழ்நாடு போக்குவரத்துறை சார்பில், சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏறபடுத்துவதற்காக வருடா வருடம் சாலை பாதுகாப்பு வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த வருடம் 30-வது சாலை பாதுகாப்பு வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று பள்ளி வாகனங்களில் விபத்துகள் ஏற்படுவதை தடுக்கும் பொருட்டும், விபத்து காலங்களில் எவ்வாறு முதலுதவி செய்ய வேண்டும் என்பது குறித்தும் பள்ளி பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. விழாவிற்கு தென்காசி வட்டா போக்குவரத்து அலுவலர் கருப்பசாமி தலைமை தாங்கினர். மோட்டர்; வாகன ஆய்வாளர் ஆனந்த், ரெட் கிராஸ் செயலாளர் சுப்பிரமணியன், ஸ்பெக்ட்ரம் பள்ளி தாளாளர்; கிருஷ்ணகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர் .

மேலும் தென்காசி போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் நாராயணன், பொது மருத்துவர் பாபுராஜ், தமிழ்நாடு ஓட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் மாநில கூட்டமைப்பு செயலாளர் வைகை குமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினர் நிகழ்ச்சியின் போது பள்ளி குழந்தைகளை ஏற்றி செல்லும் ஓட்டுனர் மற்றும் உதவியாளர்களுக்கு கண் பாரிசோதனை, இரத்த அழுத்தம் கண்டறியுதல், என பொது உடல் பாரிசோதனை நடத்தபட்டது. விபத்து காலங்களில் 108 ஊழியர்களின் செயல்பாடு, எவ்வாறு முதலுதவி அளிக்கின்றனர் என்பதை பள்ளி பேருந்து ஓட்டுனர் களுக்கு, 108 அவசர ஊர்தி ஊழியர்கள் மூலம் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் இலஞ்சி குமரன், மாரிமுத்து மற்றும் தென்காசி கல்வி மாவட்ட அளவில் உள்ள தனியார் பள்ளி ஓட்டுனர்கள் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

About Author

error: Content is protected !!