February 22, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

நெல்லை மாவட்டம் தென்காசியில் அமைந்துள்ளது காசிவிஸ்வநாதர் ஆலயம். இந்த ஆலயம் 1000 ஆண்டுகள் பழமையானது. புகழ் பெற்ற சிவாலாயங்களுள் ஒன்று. இந்த ஆலயம் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கி வருகிறது. இந்த ஆலயத்தில் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டிற்கான தெப்ப உற்சவ விழா நடைபெற்றது. முன்னதாக உற்சவ மூர்த்திகளின் வீதி உலா நடைபெற்றது. பின்னர் உற்சவ மூர்த்திகள் தெப்ப மண்டபத்திற்கு எழுந்தருளினர்.

பின்னர்  மாபொடி, மஞ்சள், இளநீர், தயிர், பால் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து சிறப்பு அலங்காரம் மற்றும் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. பின்னர் உற்சவ மூர்த்திகள் தெப்பத்தில் எழுந்தருளினர். தெப்பத்தில் 11 முறை வலம் வந்தனர். இந்நிகழ்ச்சியில் தென்காசி சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர்.

About Author

error: Content is protected !!