May 21, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

தென்காசி எம்.எல்.ஏ., செல்வ மோகன்தாஸ் பாண்டியனுக்கு பாராட்டு விழா

தென்காசி தலைமையிலான புதிய மாவட்டம் அமைத்திட பெரும் பங்காற்றி  வெற்றிகண்ட தென்காசி சட்டமன்ற உறுப்பினர் செல்வம் மோகன்தாஸ் பாண்டியனுக்கு தென்காசி பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது
விழாவிற்கு தென்காசி பத்திரிகையாளர் சங்கத்தின் கௌரவத் தலைவர்கள் சண்முகம், முரளிதரன் ஆகியோர் தலைமை தாங்கினர். சங்க தலைவர் கணபதி பாலசுப்ரமணியன், செயலாளர் ராஜேந்திரன் பொருளாளர் கே. எஸ். கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் சங்கத்தின் துணை செயலாளர் முகைதீன் வரவேற்று பேசினார். துணைத் தலைவர் எம்.முத்துசாமி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

நிகழ்ச்சியில் பத்திரிகையாளர்கள் கனியத்தா ,பிரகாஷ், சிவகுருநாதன், முத்தையா, மாரிமுத்து, பாலசுப்பிரமணியன், முப்புடாதி, முத்துக்குமார், ஜீவா ஆகியோர் பாராட்டி பேசினர். தென்காசி பத்திரிகையாளர் சங்கம் சார்பில் எம்எல்ஏ செல்வ மோகன்தாஸ் பாண்டியனுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. அனைத்து பத்திரிக்கையாளர்களும் எம்எல்ஏவை பாராட்டி வாழ்த்து தெரிவித்து கைத்தறி ஆடைகள் அணிவித்தனர்.ஏற்புரையில் எம்.எல்.ஏ., செல்வமோகன்தாஸ் பாண்டியன் பேசியதாவது:
தமிழகத்தின் முதல்வராக ஜெயலலிதா இருந்த போது நான் சட்டமன்றத்தில் கன்னி பேச்சு பேசிய போதே தென்காசியை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் அமைக்க வேண்டும் என பேசினேன். இதனை தொடர்ந்து சட்டமன்றத்தில் பேச எனக்கு வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் இக்கோரிக்கையினை வலியுறுத்தி வந்தேன். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை நான் சந்திக்கும் போதெல்லாம் இக்கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்றேன். தொடர் முயற்சியால் தென்காசி தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் அமைக்கப்பட்டது. இதற்கு முதல்வருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
தென்காசி அருகே ஆயிரப்பேரியில் அரசுக்குச் சொந்தமான இடத்தில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அமைக்கப்படும். இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். தேவையான இடம் எங்கு உள்ளது என்று கூறுங்கள். அங்கு மாவட்ட கலெக்டர் அலுவலகம் கட்டலாம். ஆனால் எதிர்ப்பவர்கள் அதற்கு பதில் அளிக்கவில்லை. நான் செய்வதை எதிர்க்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் செயல்படுபவர்களை மக்கள் இனம் கண்டு ஒதுக்கி விடுவார்கள் ,விவாதம் நடத்த தயாரா என சுவரொட்டி ஒட்டியுள்ளனர் , நான் விவாதம் செய்யவரவில்லை மக்கள் நலனுக்காக போரடி வருகிறேன் எனக்கு ஆயிரப்பேரியில் இடம் இருப்பதாக சொல்கிறார்கள் அதை நிருபித்தால் அரசியலை விட்டே விலகத் தயார்
தென்காசி அருகே மத்தளம்பாறையில் ஒரு ஐடி பார்க் உள்ளது. மேலும் பல ஐடி கம்பெனிகள் தென்காசி மாவட்டத்தில் அமைய முயற்சி எடுத்து வருகிறேன். இதனால் இப்பகுதி ,இளைஞர்கள் பொதுமக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். தென்காசி, ஆயிரப்பேரி, மேலகரம், குற்றாலம், இலஞ்சி, குத்துக்கல்வலசை ஆகிய பகுதிகளை இணைத்து தென்காசி மாநகராட்சியாக மாற்ற நடவடிக்கை மேற்கொண்டு வருகிறேன். மாநகராட்சி ஆகும் போது இப்பகுதியில் பாதாள சாக்கடை திட்டம், மெகா குடிநீர் திட்டம் கொண்டு வரலாம். மேலும் தென்காசியை சுற்றி புறவழிச்சாலை அமைக்கும் பணி விரைவில் துவங்கும். இதற்கான பூர்வாங்க பணிகள் நடைபெற்று வருகிறது.
ஜம்புநதி மேல்மட்ட கால்வாய் திட்டத்திற்கு ரூ.40.70 கோடி நபார்டு வங்கி மூலம் பெறப்படும். இதற்கான பணிகள் விரைவில் துவங்கும். இவ்வாறு எம்.எல்.ஏ., செல்வமோகன்தாஸ் பாண்டியன் பேசினார்
நிகழ்ச்சியில் தென்காசி பத்திரிக்கையாளர்கள் ஆறுமுகநயினார், திருஇலஞ்சி குமரன், செல்வன், கணேஷ்குமார், கண்ணன், சிவஞான சந்திரன், கந்தசாமி (எ) கண்ணன், இசக்கி ராஜ், எஸ்.பி.மாரியப்பன், செ.பிரமநாயகம், திருமலை ராம்குமார், கனகரெங்கன், சுந்தர்சிங், பெரியார், வெ.மணிகண்டன், திருமலைக்குமார் ,எஸ்.சங்கரபாண்டியன் மற்றும் நெல்லை மாவட்ட அதிமுக பொருளாளர் சண்முகசுந்தரம் கீழப்பாவூர் முன்னாள் ஒன்றிய துணைத்தலைவர் ‌.குணம், செங்கோட்டை ஞானராஜ், தென்காசி முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள் வெள்ள பாண்டி, கிருஷ்ணமூர்த்தி, பட்டுப்பூச்சி பீர்முகமது, முத்துக்குமாரசாமி, சாமி ஆசாரி, ரூபன், சாரதி ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் சங்க துணைத்தலைவர் இசக்கி ராஜன் நன்றி கூறினார்.

About Author

You may have missed

error: Content is protected !!