May 25, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

திருவள்ளுவர் கழக பரிசளிப்பு

தென்காசி -ஆய்க்குடியில் திருவள்ளுவர் கழகத்தின் 63 வது ஆண்டு விழா

தென் மாவட்டம் ஆய்குடியில் திருவள்ளுவர் கழகத்தில் 63 வது ஆண்டு விழா. யோகா செய்து அசத்திய மாணவ மாணவிகள். தென்காசி மாவட்டம் தென்காசி அடுத்த ஆய்க்குடியில் வள்ளுவர் கழகத்தின் 63 வது ஆண்டு விழா நடைபெற்றது.

திருவள்ளுவர் கழக பரிசளிப்பு  

விழாவில் சிறப்பு விருந்தினராக அரசு மருத்துவர் மேனகா மற்றும் பல்மருத்துவ சுகந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாற்றுமுறை மருத்துவர் காளித்துறை யோகாவின் வரலாறு, மருந்தில்லா மருத்துவத்தின் யோகாவின் பங்கு, என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார் மூச்சுப்பயிற்சி, கண் பயிற்சி ,சர்க்கரை வியாதி,தொப்பை குறைதல், ரத்த அழுத்தம், மனஅழுத்தம் இருதய படபடப்பு, பயம் போன்ற நோய்கள் வராமல் இருக்க பல்வேறு யோகாசனங்கள் செய்முறையுடன் விளக்கப்பட்டன

யோகாசனம்

புளியங்குடி தலைவன்கோட்டை பகுதியைச் சார்ந்த மாணவன் உதயகுமார் சூப்பர் பிரைன் யோகா பயிற்சி மூலம் கண்களை கட்டிக்கொண்டு பல்வேறு வகையான வண்ணங்களை கூறியும் மற்றும் அட்டைகள் விலாசம் ரூபாய் நோட்டின் மதிப்பு அவற்றின் வரிசை எண் அனைத்தையும் கூறி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். ஒருவருடைய சுவாசத்தை வைத்தே கண்களை கட்டிக்கொண்டு எதிரே நிற்பவர் செய்யும் செயல்களை செய்து அசத்தினார். இறுதியில் திருவள்ளுவர் கழக நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் ஆயக்குடி கிராமத்திலிருந்து ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்

About Author

error: Content is protected !!