May 25, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

தென்காசியில்ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி

தென்காசியில் பத்திரிகையாளர்களும் காவல் துறையினரும்  இணைந்து நடத்திய ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணியை தென்காசி காவல் நிலைய ஆய்வாளர் ஆடிவேல் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
தமிழக அரசும் உயர்நீதிமன்றமும் இருசக்கர வாகனங்களில் செல்வோர் ஹெல்மெட் அணிந்து செல்வது கட்டாயம் என உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்நிலையில் பொதுமக்கள் மத்தியில் ஹெல்மெட் அணிந்து செல்வது பற்றிய விழிப்புணர்வை  ஏற்படுத்தும் வகையில் தென்காசியில் பத்திரிக்கையாளர்களும் காவல் துறையினரும் இணைந்து நடத்திய ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு தென்காசி மூத்த பத்திரிகையாளர்கள் சண்முகம்,முரளிதரன் ஆகியோர் தலைமை தாங்கினர். தென்காசி காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் மாதவன்,  ரூபி பரிமளா  மற்றும் தென்காசி பத்திரிகையாளர்கள் சங்க நிர்வாகிகள்கணபதி பாலசுப்பிரமணியன், கே எஸ் கணேசன், சு.ராசேந்திரன்  ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினர்களாக தென்காசி காவல் நிலைய ஆய்வாளர் ஆடிவேல் தென்காசி வட்டார போக்குவரத்துத் துறை ஆய்வாளர் விஜய் ஆகியோர் கலந்து கொண்டனர். தென்காசி பத்திரிக்கையாளர் எம் முத்துசாமி வரவேற்று பேசினார்.
அதனைத்தொடர்ந்து தென்காசி காவல் நிலைய ஆய்வாளர் ஆடிவேல் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்தப் பேரணியில்  தென்காசி பத்திரிக்கையாளர்கள் கனியத்தா,இசக்கி ராஜன், முகைதீன்,.பிரகாஷ்,சிவகுருநாதன்,முத்தையா ,.மாரிமுத்து,முப்புடாதி,முத்துக்குமார், .ஜீவா, இலஞ்சி குமரன், செல்வன்,கணேஷ்குமார்,சிவஞான சந்திரன்,.கந்தசாமி என்ற கண்ணன்,  இசக்கி ராஜ், திருமலை ராம்குமார், பாலசுப்பிரமணியன், மாரியப்பன்,பிரமநாயகம் ,.கனகரெங்கன்,சுந்தர்சிங் வி மணிகண்டன் , திருமலைக்குமார், கணேசன், .பிரேம்சந்தர் , சங்கரபாண்டியன், முருகேசன் மற்றும் தென்காசி காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மாரிமுத்து, சண்முகநாதன், சாமுவேல், தனிப்பிரிவு முதன்மை காவலர் முத்துராஜ், தலைமை காவலர் ரமேஷ், குற்றப்பிரிவு காவலர்கள் வடிவேல்,முருகன் ,மாரியப்பன், முத்துப்பாண்டி மற்றும் காவலர்கள் செந்தில் வாசம், பொன்ராஜ் மற்றும் பயிற்சி உதவி ஆய்வாளர் குட்டி ராஜ் ஆகியோர்  ஹெல்மெட் அணிந்தபடி இருசக்கர வாகனத்தில் பேரணியாக தென்காசி நகரில் வலம் வந்தனர்.
ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி தென்காசி கோவில் வாசல் முன்பிருந்து புறப்பட்டு தெற்கு மாசி வீதி, வடக்குமாசி வீதி,  கன்னிமாரம்மன் கோவில்தரு,கூலக்கடை பஜார், வடக்கு மவுண்ட் ரோடு, கொடிமரம், வாய்க்கால் பாலம், ஆர்சி சர்ச், பழைய அரசு மருத்துவமனை, அணைக்கரை தெரு, சுவாமி சன்னதி பஜார் வழியாக சென்று கோவில் வாசல் முன்பு நிறைவடைந்தது. முடிவில் பத்திரிகையாளர்  இசக்கி ராஜன்  நன்றி கூறினார்.

About Author

error: Content is protected !!