May 18, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

தென்காசியில் நள்ளிரவில் 2 சொகுசு கார்கள் தீ வைப்பு காவல்துறையினர் விசாரணை

தென்காசியில் நள்ளிரவில் 2 சொகுசு கார்களில் தீ. மர்ம நபர்கள் தீவைத்தார்களா? என காவல்துறையினர் விசாரணை.

தென்காசி மாவட்டம் தென்காசி அடுத்த கீழப்புலியூர் பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன் இவர் கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவர் தனது வீட்டு வாசலில் தனது காரை நிறுத்தியுள்ளார். நள்ளிரவில் திடீரென கார் தீப்பற்றி எரிந்தது. அக்கம்பக்கத்தினர் தகவல் தெரிவிக்கவே மாரியப்பன் விரைந்து வந்து தீயை அணைத்து உள்ளார்.
மாரியப்பன் காரின் அருகில் கார்த்திகேயன் என்பவருக்கு சொந்தமான கார் தீப்பற்றி எரிந்து உள்ளது. தொடர்ந்து தென்காசி காவல்துறை துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மர்ம நபர்கள் யாரும் தீ வைத்தார்களா அல்லது மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது இன்று பல்வேறு கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

About Author

error: Content is protected !!