March 3, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

தென்காசியில் சமத்துவ மக்கள் கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

திருநெல்வேலி மாவட்டம் தென்காசியில் சமத்துவ மக்கள் கழகத்தின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் அகரக்கட்டு லூர்து தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் நெல்லை மேற்கு மாவட்டத்தில் அதிகபடியான உறுப்பினர்களை சேர்ப்பது, ஐனவரி மாதத்தில் சுரண்டைக்கு வரும் தலைவருக்கு சிறப்பாக வரவேற்பு அளிப்பது, தென்காசி – திலி நான்கு வழிச்சாலை திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும். தென்காசியில் போக்குவரத்து நெரிசல் அதிகம் ஏற்படுவதால் பகல் நேரங்களில் கனரக வாகனங்களை மாற்று பாதையில் இயக்க வேண்டும். தென்காசி பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான தென்காசி தனி மாவட்டம் வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவிக்க வேண்டும் உள்ளீட்ட பல்வேறு தீர்மாணங்கள் நிறைவேற்றப்பட்டன. வழக்கறிஞர் அணி செயலாளர் ராஜன் ஆசிர்வாதம், மாவட்ட மகளிர் அணி செயலாளர் மல்லிகா, மாவட்ட இளைஞர் அணி செயலாளர் பாலமுருகன், முப்புடாதி, மாரிமுத்து உட்பட பல்வேறு கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

About Author

error: Content is protected !!