May 25, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

தென்காசியில்-காசநோயாளிகளுக்கு ஊட்டசத்து வழங்கும் விழா

தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மாவட்ட காசநோய் மையத்தில் துணை இயக்குநர் மருத்துவப்பணிகள்(கா.நோ) மருதுவர் வெள்ளசாமி தலைமையில் காசநோயாளிகளுக்கு ஊட்ட சத்து வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் துணை இயக்குநர் மருத்துவப்பணிகள்(கா.நோ) நோயாளிகளுக்கு ஊட்ட சத்து பொருட்கள் வழங்கி ஊட்ட சத்து உணவின் முக்கியத்தும் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். மாவட்ட நலக்கல்வியாளர் ஆ. மாரிமுத்துசாமி காசநோயாளிகளுக்கு அரசு வழங்கிவரும் நிக்ஷய் போஷன் யோஜனா உதவித்தொகை நிதி உதவி பற்றியும், மருத்துவர் . ஜாபர்அலி காசநோய் சிகிச்சை முறைகள் பற்றி விரிவாக எடுத்துரைத்தனர். சிறப்பு விருந்தினராக சாகுல்கமீது கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். விழாவிற்கான ஏற்பாட்டினை மாவட்ட காசநோய் பணியாளர்கள் சரவணன், தினேஷ்,ரங்கநாதன் ராக் லேண்ட் ஜிம் ஆகியோர் செய்திருந்தனர்

About Author

error: Content is protected !!