February 28, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

தென்காசியில் ஏ.டி.எம்-யை உடைத்து பணம் திருட முயற்சி

தென்காசியில் ஏ.டி.எம்-யை உடைத்து பணம் திருட முயற்சி. காவல் துறையினர் விசாரனை

நெல்லை மாவட்டம் தென்காசியை அடுத்த மேலகரத்தில் SBI வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம் மையம் உள்ளது. இங்கு உள்ள இயந்திரத்தை இன்று அதிகாலையில் யாரோ உடைக்க முற்ப்பட்டுள்ளனர்.
இதனால் வங்கியில் அலார மணி அடித்தது. இதனை தொடர்ந்து வங்கி ஊழியர்கள் ஏ.டி.எம் மையத்திற்கு விரைந்தனர். அங்கு ஏ.டி.எம் இயந்திரம் மற்றும் கண்காணிப்பு காமிரா உடைக்கப்பட்டிருந்தது.
இதனை தொடர்ந்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு தென்காசி காவல்துறை துனை கண்காணிப்பாளர் கோகுலகிருஷ்ணன் தலைமையில் குற்றாலம் காவல் ஆய்வாளர் ஜெய்சல் குமார், தலைமை காவலர்கள் அலெக்ஸ், சாகுல் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
குற்றாலம் செல்லும் பிரதான சாலையில் இந்த ஏ.டி.எம் மையம் அமைந்திருப்பதால் யாரேனும் திருட முயற்சித்தார்களா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரனை செய்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்ப்பட்டது.
மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தில் கொள்ளை முயற்சி நடந்திருப்பது பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

About Author

error: Content is protected !!