March 3, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

தென்காசியில் இலவச இருதய பரிசோதனை முகாம் நடைபெற்றது

தென்காசியில் குழந்தைகளுக்கான இலவச இருதய பரிசோதனை முகாம்
250 குழந்தைகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டது
தென்காசியில் நடைபெற்ற குழந்தைகளுக்கான இலவச இருதய பரிசோதனை முகாமில் 250 குழந்தைகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.குற்றாலம், செங்கோட்டை ரோட்டரி சங்கங்கள் மற்றும் சென்னை அப்பல்லோ குழந்தைகள் மருத்துவமனை சார்பில் தென்காசி எம். கே.வி.கே. பள்ளி வளாகத்தில் குழந்தைகளுக்கான இலவச இருதய பரிசோதனை முகாம் நேற்று நடைபெற்றது.
முகாமிற்கு ரோட்டரி கவர்னர் ஷேக் சலீம் தலைமை தாங்கினார். மாவட்ட திட்ட தலைவர் டாக்டர் அப்துல் அஜீஸ் வரவேற்றார். முகாமின் நிறுவனர் ஷாஜகான் முகாம் குறித்து விளக்கி பேசினார். இருதய பரிசோதனை முகாமின் தலைவர் டாக்டர் கோதண்டராமன், ரோட்டரி சங்க மாவட்ட செயலாளர் சிதம்பரம் ஆகியோர் பேசினார்கள்.
நிகழ்ச்சிகளை டாக்டர் முத்தையா ஒருங்கிணைத்தார் இந்த முகாமில் சென்னை அப்பல்லோ டாக்டர் அன்னி தலைமையில் டாக்டர்கள் நாகராஜ்,ராஜேஷ்மற்றும் குழுவினர் பிறந்த குழந்தை முதல் 16 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு பரிசோதனை செய்தது. இதில் மொத்தம் 250 குழந்தைகள் பரிசோதனை பரிசோதனை செய்யப்பட்டன. இவற்றில் 46 குழந்தைகள் அறுவை சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டனர்.
இந்த குழந்தைகளுக்கு சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் இலவசமாக அறுவை சிகிச்சைகள் நடைபெறும்.அறுவை சிகிச்சைக்கு அழைத்துச் செல்லும் செலவையும் ரோட்டரி சங்கங்கள் ஏற்றுக்கொண்டுள்ளன. முகாமில் குற்றாலம், செங்கோட்டை பகுதிகளிலுள்ள ரோட்டரி சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டு சேவை செய்தனர். முடிவில் மாவட்ட திட்ட கருத்தரங்கின் தலைவர் முருகன் ராஜ் நன்றி கூறினார்.

About Author

error: Content is protected !!