February 28, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

தென்காசியில் பாரம்பரிய இயற்கை உணவு திருவிழா

திருநெல்வேலி மாவட்டம் தென்காசி தமிழ்நாடு அரசு அலுவலர் சங்க கட்டிடத்தில் இன்று பாரம்பரிய இயற்கை உணவு திருவிழா மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு இடைகால நம்மாழ்வார் கோட்டை வேளாண் பயிற்சி மைய நிறுவனர் பார்வதி செல்லையா தலைமை தாங்கினார். மேலும் இந்த முகாமில் சிவகாசி தாய் வழி உணவக நிர்வாகி மாறன், தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு  பாரம்பரிய இயற்கை உணவு வகைகள் குறித்தும் பேசினர்.


நமது பாரம்பரிய உணவு வகைகள், இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட தானிய வகைகள், காய்கறி மற்றும் பழங்களின் நன்மைகள் குறித்தும் இதன் மூலம் எவ்வாறு நோய்களில் இருந்து விடுபடுவது குறித்தும் ஆலோசனை வழங்கப்பட்டது. இந்த முகாமிற்கான ஏற்பாடுகளை இடைகால் வேளாண் பயிற்சி, தகவல் மையம் மற்றும் நூலக நிர்வாகி சிவனேஸ்வரன் மற்றும் தென்காசி அரவிந்த் யோகாலய பயிற்சியாளர் பாலசுப்பிரமணியன் செய்திருந்தனர். இந்த முகாமில் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர்.

About Author

error: Content is protected !!