February 22, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

கீழப்பாவூர் பேரூராட்சி தூய்மைப்பணியாளர்களுக்கு உணவு வழங்கும் கே.ஆர்.பி.பிரபாகரன்

தூய்மைப் பணியாளர்களை உணவளித்து ஊக்கப்படுத்திய கே.ஆர்.பி.பிரபாகரன்

தமிழகம் முழுவதும் கொரொனோ தொற்று தடுப்பு பணிக்கு தடுப்பு பணியில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது மேலும் இதற்கான வெளியிலிருந்து இதற்காக பாடுபடும் மருத்துவர்கள் காவலர்கள் தூய்மைப் பணியாளர்களை அரசு உற்சாகப்படுத்தி வருகிறது இந்நிலையில் கீழப்பாவூர் பேரூராட்சியில் பணி புரியும் தூய்மைப் பணியாளர்கள் சுமார் 80 பேருக்கு திருநெல்வேலி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் அதிமுக புறநகர் மாவட்டக் கழகச் செயலாளருமான கே.ஆர்.பி பிரபாகரன் கீழப்பாவூர் பேரூராட்சி பகுதிகளில் கொரொனோ தொற்று தடுப்பு பணியில் சிறப்பாக பணியாற்றி வரும் பணியாளர்களை ஊக்குவிக்கும் பொருட்டு தனது சொந்த செலவில் அவர்களுக்கு மதிய உணவை அளித்தார்

கீழப்பாவூர் பேரூராட்சி தூய்மைப்பணியாளர்களுக்கு உணவு வழங்கும் முன்னாள் நெல்லை பாராளுமன்ற உறுப்பினர் கே.ஆர்.பி.பிரபாகரன்

மேலும் அவர்களுக்கு தேவையான சனிடைசர் ,மற்றும் குளியல் சோப், முககவசம் அதோடு அவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக ஊக்கத்தொகை ரூபாய் 500 வழங்கி அவர்களின் செயல்களைப் பாராட்டிப் பேசினார்
மேலும் இதுகுறித்து அவர் துய்மைப் பணியாளர்கள் மத்தியில் பேசும்போது இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கொரொனோ தொற்று தடுப்பு பணிக்கு தடுப்பு பணி தீவிரப் படுத்தபட்டு வருகிறது , இந்தியாவில் தமிழக அரசு சிறப்பாக பணியாற்றுவதாக பாரதப் பிரதமர் பாராட்டியுள்ளார் , மேலும் தமிழகத்தில் கீழப்பாவூர் பேரூராட்சி தூய்மை பணியில் சிறந்த பேரூராட்சியாக விளங்க வேண்டும் அதற்கு நீங்கள் உங்கள் பணியை சிறப்பாக செய்ய வேண்டும் , தூய்மைப் பணியாளர்கள் என அரசு உங்களுக்குகௌரவம் தந்துள்ளது

தூய்மைப் பணியாளர்களை ஊக்கப்படுத்தி பேசும் கே.ஆர்.பி.பிரபாகரன்

இப்பேரூராட்சி பணியில் நீங்கள்தான் முன்னுதாரமாக உள்ளீர்கள் , வருமுன் காப்போம் என்பது முன்னோர் வாக்கு அதற்கேற்ப நீங்கள் இப்பணியில் சிறப்பாக பணியாற்றவேண்டும் , உங்கள் உழைப்பு மிகவும் போற்றக்கூடியது உங்களை ஊக்கப்படுத்துவதற்காக என்னால் இயன்ற சிறிய உதவி இது மேலும் அனைவரும் அரசின் கூற்றுப்படி சமூக விலகலைப் பின்பற்ற வேண்டும் என்று கூறி பணியாளர் மத்தியில் பேசினார் முன்னதாக தூய்மைப்பணியாளர்களை கைத்தட்டி உற்சாகப்படுத்தினார் ,தொடர்ந்து ஆலங்குளம் பேரூராட்சி தூய்மைப்பணியாளர்கள் 80 பேருக்கு இதே போல வழங்கினார்

முன்னதாக அவருக்கு பேரூராட்சிக்கு வந்த கே.ஆர்.பி பிரபாகரன் அவர்களுக்கு வரவேற்பு அளிக்க அனைவரும் வந்தனர் ஆனால் அவர் சமூக விலகல் கடைப்பிடிக்க வேண்டி சால்வை ஏதும் வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார் மேலும் அனைவரையும் ஒரு மீட்டர் இடைவெளி நிற்க வைத்தே பேசினார் உங்களிடம் நெருங்கி வராமல் தள்ளி நின்று கொடுக்கிறேன் என்று நினைக்கவேண்டாம் அரசின் உத்தரவுப்படி சமூக விலகளை நாம் அனைவரும் கடைபிடிப்போம் என்று கூறினார் அதற்கு ஏற்ப அனைத்து பணியாளர்களும் ஒவ்வொரு மீட்டர் இடைவெளி விட்டே நின்றனர் , உணவைப் பெற்றுக்கொண்ட தூய்மைப்பணியாளர்கள் மிகவும் நெகிழ்ந்து போனார்கள் இது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது நிகழ்வின் போது ஆலங்குளம் வட்டாச்சியர் பட்டமுத்து ,கீழப்பாவூர் பேரூராட்சி நிர்வாக அதிகாரி கண்மணி,சுகாதார ஆய்வாளர் இசக்கியப்பா ஆகியோர் உடனிருந்தனர்

About Author

error: Content is protected !!