June 22, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்கினார் பரணி சங்கரலிங்கம்

திருநெல்வேலி மாநகரப் பகுதியில் கொரொனோ தடுப்பு பணிக்காக பணியாற்றும்  தூய்மைப் பணியாளர்களுக்கு  உணவு வழங்கினார்பரணி சங்கரலிங்கம் 

நெல்லை சந்திப்பு சிந்துபூந்துறை செல்வி நகரில் தூய்மை பணியாளர்கள் 100 பேருக்கு நெல்லை மாநகர் மாவட்ட அதிமுக அவைத் தலைவரும் மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினருமான பரணி சங்கரலிங்கம் உணவு மற்றும் குளிர்பானங்கள் தண்ணீர் பாட்டில்கள் முகக் கவசங்கள் வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து பரணி சங்கரலிங்கம் நிருபர்களிடம் கூறுகையில்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் துப்புரவு பணியாளர்களை போற்றும் விதமாக அவர்களை தூய்மைப் பணியாளர்கள் என அழைத்தார். கொரோனோ தடுப்பு பணிக்காக,மருத்துவர்கள் மருத்துவ பணியாளர்கள் காவலர்கள் என பலரும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர் இதற்காக தூய்மைப் பணியாளர்கள் மேற்கொள்ளும் பணியும் மிகவும் புனிதமானது எனவே அவர்களை போற்றும் விதமாக இன்று அவர்களுக்கு இந்த இக்கட்டான சூழ்நிலையில் அவர்களுக்கு தேவையான பொருள்களை அறிந்து உதவிகள் செய்து வருகிறோம். தூய்மைப் பணியாளர்களின் பணிகள் சிறப்புக்குறியது என்றார்

செய்தியாளர்
நெல்லை டேவிட்

நெல்லை டேவிட்

About Author

error: Content is protected !!