May 18, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

தூய்மைப் பணியாளர்களுக்கு சீருடை வழங்கினார் பாசறை செயலாளர் சேர்மபாண்டி

நாடு முழுவதும் கொரொனோ தொற்று பரவலை தடுக்க பல்வேறு கட்ட முயற்சிகளை எடுத்து வருகிறது மேலும் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் மருத்துவர்கள், செவிலியர்கள்,மற்றும் மருத்துவ பணியாளர்கள், காவலர்கள் மேலும் தூய்மைப் பணியாளர்கள் என எல்லோரையும் ஊக்குவித்து வருகிறது ,

பொதுமக்களும் தங்கள் பங்களிப்பாக ஊரடங்கு பணியினை மேற்கொள்ளும் காவலர்களுக்கு உணவு வழங்குதல் , மாலை நேர தேநீர் வழங்குதல் ,மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு சீருடை, மளிகைப் பொருட்கள் வழங்கி அவர்களின் சேவையை ஊக்குவிக்கும் விதமாக நாள்தோறும் ஒன்றை செய்து வருகின்றனர் ,
இந்நிலயில் திருநெல்வேலி புறநகர் மாவட்ட செயலாளர் கே.ஆர்.பி.,பிரபாகரன்அறிவுறுத்தலின் படி கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம் கல்லூரணி ஊராட்சி மன்ற சுவஜல்தாரா எழுத்தர், பணித்தள பொறுப்பாளர், ஊராட்சி சிப்பந்திகள் மற்றும் தூய்மைக் காவலர்களுக்கு முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சேர்மபாண்டி புதிய ஆடைகள், மாஸ்க், கையுறை , கை கழுவுவதற்கு சோப்பு மற்றும் ஊக்கத் தொகை ரூ.500 ஆகியவற்றை வழங்கினார் கீழப்பாவூர் வட்டார வளர்ச்சி அலுவலர் பார்த்தசாரதி , கீழப்பாவூர் வட்டார வளர்ச்சி அலுவலர் திருமதி.எஸ்.ராதா துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பத்மா,கிராமஊராட்சி, ஒன்றிய பொறியாளர், ஒய்வு பெற்ற ஆசிரியர் கோபு (எ)பத்மநாபன், அருணோதயம்,ஊராட்சி செயலாளர்கள் எஸ்ஜெயசிங் ராஜன், தங்க செல்வன்,அலி ஆகியோர்கலந்துகொண்டனர்

About Author

error: Content is protected !!