June 17, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

திருவரங்கன் ஆன சட்டைமுனி சித்தர்

திருவரங்கன் ஆன சட்டைமுனி எல்லோரும் கருவறைக்குள் செல்லலாம் என்றார் சட்டைமுனி இவரின் குருநாதர் போகர்வாழ்ந்த காலம் 880 ஆண்டுகள் 14 நாட்கள்
இவரின் சீடர்கள் சுந்தரானந்தர் பாம்பாட்டிச் சித்தர்இவர் ஐக்கியமான திருத்தலம் திருவரங்கம்சட்டைமுனி சித்தர் ஆவணி மாதம் மிருகசீரிடம் மூன்றாம் பாதத்தில் பிறந்தார் என்று சொல்லப்படுகிறது இவர் சட்டைமுனி 1200 திரிகாண்டம் சரக்கு வைப்பு நவரத்தின வைப்பு நிகண்டு வாத காவியம் தீட்சை ஞான விளக்கம் உள்ளிட்ட 14 நூல்கள் இயற்றியுள்ளார் ஏற்றத்தாழ்வு நிறைந்த சமூகத்தில் மூடத்தனமான பக்தியை மக்களிடம் திணித்து இறைவனை கொச்சைப்படுத்துவதை கண்டித்து பல்வேறு பாடல்களை எழுதினார் ஆனால் அதில் பல நூல்களை அந்த காலத்தில் வாழ்ந்தவர்கள் வேதியர்களான குருக்கள் வேண்டுமென்றே அழித்துவிட்டார்கள்

சித்தர்கள் ஜாதி மதம் குலம் சடங்கு சம்பிரதாயங்களை விரும்பாதவர்கள் அந்த மெய்யான இறைவனை அடைந்து பொய்யான போலிச் சடங்குகளை எதிர்த்தவர்கள் சித்தர் சட்டை முனி கைலாயம் சென்று சிவபெருமானை வணங்கி வந்தார் என்று சொல்லப்படுகிறது அப்படி அவர் அங்கே செல்லும் போது குளிர் தாங்கமுடியாமல் கம்பளிச் சட்டைஅணிந்தார் அதையே நிரந்தரமாக எங்கு சென்றாலும் அணிந்து கொண்டார் இதனால் இவர் சட்டைமுனி எனப்பட்டார் என்று சொல்லப்படுகிறது

தாய் தந்தையர்கள் இசைக்கருவிகள் வாசித்தும் நல்ல விவசாயம் செய்வதையும் தொழிலாக பார்த்துவந்தனர் அதிலிருந்து கிடைக்கப் பெற்ற வருமானம் கொண்டு ஏழை எளியோருக்கு அளித்து பெருந்தொண்டு செய்தார் சட்டைமுனி அப்போது வானம் பொய்த்தக் காரணத்தால் விவசாயம் செய்து பிழைக்க முடியாமல் நிலை ஏற்பட்டது மக்கள் பட்டினியால் வாடும் நிலை ஏற்பட்டது மக்களின் குறை தீர்ப்பதற்காக சட்டைமுனி கடும் தவம் புரிந்தார் பிறர் நலனுக்காக பயணிக்கும் அன்பர்களுக்கே சித்தர்களின் மகான்களின் யோகிகளின் சிவபெருமானின் முனிவர்களின் அருள் கிடைக்கும்

ஆம் அவ்வாறு இருக்கும்போது வட நாட்டிலிருந்து சங்கு பூண்ட ஒரு முனிவர் ஒருவர் சட்டை முனியை கண்டார் அவரிடம் தன்னுடைய மக்களின் குறைகளை எடுத்து கூறி கண்ணீர் விட்டார் முனிவர் யாவும் விதியின் வழி தான் செல்லும் ஆனால் நீ புண்ணியவான் சுயநலமின்றி இந்த மக்களின் பசிப்பிணியை நீக்கவும் பெற்ற தாய் தந்தை நலமாக இருக்கவும் வேண்டுகிறாய் இன்று நீ செய்யும் செயல் மிகப்பெரியது புண்ணியமான செயலாகும் விரைவில் உனது நிலையும் காலமும் மாறும் சிவன்பால் சிந்தனையை நிறுத்து என்று சொல்லி சென்றார்

சட்டைமுனி மன மகிழ்ச்சிக் கொண்டார் முனிவர் கூறியது போல் மழை நல்லபடி பெய்தது விளை நிலங்களில் நல்ல விளைச்சல் விளைந்தது அயராத உழைப்பால் சட்டைமுனியின் வாழ்வும் மலர்ந்தது மக்கள் ஆனந்தப்பட்டார்கள் இறைவனை உளமாற நினைத்து வணங்கினார்கள் கோவிலின் உள்ளே பிச்சை எடுப்பவர்களுக்கும் ஏழை எளியவர்களுக்கும் தன்னால் இயன்ற அளவு உதவி செய்தார் பின்னர் பெற்றோர்கள் சட்டைமுனிக்கு திருமணம் நடத்தினார்கள் இல்லற வாழ்வில் ஈடுபாடு இல்லாவிட்டாலும் குடும்பம் நடத்தினார் தியானத்திலே இருந்து இறைவனை வழிபட தவறவில்லை

ஒருநாள் வெற்று உடம்போடு இருந்த சட்டை முனியை சட்டை போடுவதற்கு சட்டை எடுக்கும்போது வெளியிலிருந்து ஒரு குரல் வந்தது என்னப்பா உடுத்துவதில் உறுதியாய் இருக்கிறாய் போலிருகிறது இன்னும் உதறிவிட எண்ணம் இல்லையா என்றது உடனே சட்டைமுனி திடுக்கிட்டு திரும்பினார் எதிரே சங்கு பூண்ட முனிவர் நிற்பதைக் கண்டார் அவர் காலடியில் வீழ்ந்து வழி காட்டுங்கள் என்றார் சித்தர்கள் முனிவர்கள் தம்முடைய ஆன்ம தொடர்பு உடையவர்களை நாடி வந்து பிடித்துக் கொண்டு விடுவார்கள்

உன் நிலையை யாம் அறிவோம் இப்போது ஆயத்தமாக இருக்கிறாயா என்றார் முனிவர் ஆம் சாமி என்று தாம் அணிந்திருந்த சட்டையை உதறினார் சட்டை முனியே வாரும் எம்மோடு என்று அழைத்துச் சென்றார் இவரை கைலாய சட்டைமுனி நாயனார் என்றும் எப்போதும் கம்பளி மேலாடையை அணிந்து இருப்பதால் கம்பளிச் சட்டைமுனி என்றும் அழைக்கப்படுகிறார்
சங்கு முனிவரின் கையைப் பற்றிக் கொள்ள இருவரும் கனக மார்க்கமாக ஆகாயத்தில் பறந்தனர் இந்த செயலைக் கண்டு சட்டைமுனி வியப்படைந்தார் இதுகுறித்து இதில் ஒன்றும் வியப்பில்லை இரசமணியின் சக்தியால் இவைகள் சாத்தியமாகும் உனக்கு இது போக போக விளங்குகின்றது அம்முனிவரின் உபதேசங்களைக் கேட்டு அவருடன் சுற்றி வந்தார் இறுதியில் போகரை சந்தித்து சித்தர்களின் வழியில் தன் பயணத்தை தொடர்ந்தார் அவருடன் இருந்த போது கொங்கணச் சித்தர் கருவூரார் சித்தர் பெருமக்களின் இனிய தொடர்பு ஏற்பட்டது அகத்தியரிடம் சீடராகச் சேர்ந்து ஞான நிலையினை அடைந்தார்

இவரின் விடாமுயற்சி மூலம் ஞானத்தின் உயர்நிலையை எட்டினார் இவரின் தவத்தால் கைலாயத்தில் சிவ பெருமானை தரிசிக்கும் பாக்கியம் பெற்றார் ரோம மகரிஷி போன்ற சித்தர்களின் நட்பும் ஆதரவும் பெற்று சிறந்து விளங்கினார்
சட்டைமுனி ஒருமுறை திருவரங்கர் கோவில் கலசங்களை கண்டு பேரானந்தம் கொண்டார் ஒருநாள் இரவு திருவரங்கம் கோயில் கோபுரத்தை தரிசித்து இக்கோவில் நடைசாத்துவதற்குள் அரங்கனை தரிசித்து விட வேண்டுமென ஆவல் கொண்டார் அப்போது அங்கிருந்த குருக்கள் கருவறைக்குள் நாங்கள் மட்டுமே செல்ல இயலும் கண்டவர்கள் செல்ல இயலாது என்று கூறி கோவில் கதவை சாத்தி விட்டு சென்றார்கள்

சட்டைமுனி இந்த அற்பர்களுக்கு தக்க புத்தி புகட்டும் வழியை சிந்தித்தார் சித்தன் தானே சிவன் சட்டைமுனி கோவில் வாசலில் நின்று அரங்கா அரங்கா அரங்கா என்று மூன்று முறை அழைத்தார் ஆலயக் கதவுகள் தானாகத் திறந்தன அரங்கனின் அற்புத தரிசனம் சட்டைமுனிக்குக் கிடைத்தது கோயிலுக்குள் சென்று மனம் உருகி அமர்ந்திருந்தார்
நற்செயல்களை செய்யும் மனிதனே இறைவன் கோயில் வாயில் கதவு திறந்திருப்பதை கண்ட குருக்கள் காவலர்களுடன் உள்ளே நுழைந்தார்கள் கருவறையில் நின்றிருந்த சட்டை முனியை கண்டு மிரண்டனர்

அரங்கனின் தோள்பட்டையில் கழுத்திலிருந்த ஆபரணங்கள் அனைத்தும் சட்டைமுனியின் உடலில் தகதகவென்று மின்னியது ஆத்திரமடைந்த காவலர்கள் சட்டை முனிவரை சிறை பிடித்து மன்னரிடம் ஒப்படைத்தனர்

மன்னர் விசாரணையின்போது சட்டைமுனி நடந்த விபரத்தினை கூறினார் மேலும் ஆலயம் என்பது பொதுவான ஒன்று அங்கு ஏற்றத்தாழ்வுகள் பார்ப்பது தவறு உண்மையில் அவன் என் உள்ளே இருக்கிறான் என்று பதிலுரைத்தார் ஆனால் மன்னன் இந்த கூற்றை நம்பவில்லை மன்னன் இது உண்மையாக இருந்தால் முன்பு போன்றே நீங்கள் அரங்கனை அழையுங்கள் அதேபோன்று மணி அடித்து கதவு திறந்து அரங்கன் வந்தால் நான் உங்களை நம்புகிறேன் என்றார் குருக்கள் அனைவரும் இவரை நம்பக்கூடாது சிறையில் அடையுங்கள் என்றனர்.

ஆனால் மன்னன் சற்று பயந்து ஆய்வை நடத்தினார் சட்டை முனியை மீண்டும் கோயில் வாசலில் நிறுத்தி எங்கே குரல் கொடுங்கள் மணி அடிக்கிறதா என்றும் வாயிற் கதவு திறக்கிறதா அரங்கன்தெரிகிறானா என்று பார்ப்போம் என்றான் மன்னன் சட்டைமுனி மீண்டும் ரங்கா ரங்கா ரங்கா என்று மூன்று முறை குரல் கொடுக்க வாயிற் கதவு தானே திறந்தது பின்னர் கருவறைக்குள் சென்றவுடன் தன்னாலே ஆபரணங்கள் பறந்து வந்து சட்டைமுனியின் உடலில் ஏறியது இதை பார்த்தவுடன் மன்னன் மக்கள் உணர்ந்து வணங்கி நின்றனர் குருக்கள் மன்னிப்பு கேட்டனர் மன்னன் தான் தவறு செய்து விட்டதாக உணர்ந்து மன்னிப்பு கேட்டான் அவரை தம்மோடு தங்கியிருக்க வேண்டினார்

சட்டைமுனியும் திருவரங்கத்திலேயே சில நாட்கள் தங்கி இருந்தார் சில நாட்களுக்கு பிறகு இறைவனுடன் ஒளியாக திருவரங்கப்பெருமானுடன் கலந்துவிட்டார் திருவரங்கத்தில் சட்டைமுனி ஜீவ சமாதி என்பது தனியாக எதுவும் கிடையாது ஆனால் திருவரங்கத்து பெருமாள் உடன் ஜோதி சொரூபமாக ஐக்கியமாகி விட்டதால் சட்டைமுனி ஜீவசமாதியாக கருதப்படுகிறது

ஜோதிடர் முகவரி

சித்தர்கள்தாசன் சிவனடிமை முருகன்அருள் #பிரேம்சந்த் நம்பிராஜன் சென்னை செல்லிடப்பேசி 9789168398

About Author

You may have missed

error: Content is protected !!