February 22, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

திருமண நாளில் தொண்டர்களிடம் விஜயகாந்த் உருக்கம்

தேமுதிக தலைவரும் பொதுச் செயலாளருமான விஜயகாந்த் பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் 30 வது திருமணநாளை தொண்டர்கள் முன்னிலையில் கொண்டாடினார் ,பின்னர் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது

விழாவில் கேப்டன் விஜயகாந்த் பேசும்போகையில் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துகள் விரைவில் மக்களுக்கு நல்லது செய்ய உங்கள் அனைவரையும் தேடி வருவேன்” என் குரல் கேக்குதா
விருந்து ஏற்ப்பாடு செய்யப்பட்டுள்ளது எல்லோரும் சாப்பிட்டுத்தான் போகணும் என்றார்.

பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில் இன்று எங்களது 30-ம் ஆண்டு திருமணநாள் அதை உங்கள் முன்னிலையில் கொண்டாட முடிவு செய்தோம். எங்களது தொண்டர்கள் முன்னிலையில் கொண்டாடுவது மகிழ்ச்சியாக உள்ளது விரைவில் ஊர் ஊராக வந்து கேப்டன் பிரசாரம் செய்வார்.

தமிழகத்தின் முதன்மையான கட்சியாக தே.மு.தி.க. திகழும், கூட்டனி தர்மத்தை கடைபிடிக்கும் ஒரே கட்சி தே.மு.தி.க. தான். அதற்காக குட்ட குட்ட குனியமாட்டோம் தலைவர் கேப்டன் தலைமையில் ஆட்சி அமைய நாம் உறுதி ஏற்போம். என்றார்
விழாவில் விஜயகாந்த் நண்பர் அக்பர் கொள்கை பரப்பு செயலாளர் மோகன் ராஜ், துனை செயலாளர்கள் எல்.கே சுதிஷ், பார்த்தசாரதி உள்ளிட்ட தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர். தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்

About Author

error: Content is protected !!