February 22, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

திருப்பூர் தளிர் சார்பில் நூல் அறிமுக விழா

தளிர் இலக்கிய களம்” மற்றும் “தேனி முற்போக்குக் கலை இலக்கிய மேடை” அமைப்பும் நடத்திய இலக்கிய நிகழ்வுகள் . கவிதை வாசிப்பு இசைப் பாடல்கள் என  தொடங்கின.

செல்லம் ரகு வரவேற்புரையாற்றினார். டாப்லைட் குழுமத் தலைவர் வேலுசாமி தலைமையேற்று சிறப்புரையாற்றினார்  பாரதிவாசன், உமர்கயான் , விசாகன், திருப்பூர் தாய்த்தமிழ்ப் பள்ளி கு.நா. தங்கராசு, உலகத் தமிழ் ஆராய்ச்சியாளர் ஸ்ரீ ரோகினி (துபாய்) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிவதாசன், ஜெயபால், லட்சுமி விசாகன், கனல், ஆகியோர் கவிதை வாசித்தனர். தூ.சோ. பிரபாகர், துருவன் பாலா ஆகியோர் இசைப் பாடல்கள் வழங்கினார்கள்.

அம்பிகா குமரன்னின் “வெளிதேடும் சொற்கள்” என்ற கவிதை நூலினை சத்தியசீலன் , கோ.லீலா அவர்களின் மறைநீர் என்ற நூலினை சாய்ரா பானு , கோவை கவிஜீ யின்”நிழல் தேசத்துக் காரனின் சித்திரப் பறவைகள்” என்கிற கவிதை நூலினை முத்து மீனாட்சியும் அறிமுகமும் விமர்சனமும் செய்தார்கள்.

முடிவில் கவிஞர் ரத்தினமூர்த்தி நன்றி கூறினார்

About Author

error: Content is protected !!