June 22, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

நெல்லைகாவல்துறை நடத்தும் கொரோனா விழிப்புணர்வு ஓவியப் போட்டி

திருநெல்வேலி மாநகரம்சட்டம் & ஒழுங்கு   காவல் துணை ஆணையர் சரவணன் 22 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை  கொரொனோ பரவுதல் தடுக்கும் விதமாக நாடு முழுவதும் சுய ஊரடங்கு உத்தரவை அமல்படுத்த கோரிக்கை விடுத்துள்ளது  இதையொட்டி  திருநெல்வேலி மாநகர காவல்துறையின்  சார்பில் சட்டம் & ஒழுங்குகாவல் துணை ஆணையர்சரவணன்   “கொரோனா விழிப்புணர்வு ஓவியப் போட்டி” யை அறிவித்துள்ளார்

22 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மக்களே ஊரடங்கு ஏற்படுத்தும் நாள்.

14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஒரு விழிப்புணர்வு ஓவியப்போட்டி .

வீட்டிலிருந்தபடியே A4 வெள்ளை தாளில் வண்ணப்பென்சில் அல்லது சாதாரண பென்சிலில் வரைந்து அலைபேசியில் புகைப்படம் எடுத்து திருநெல்வேலி மாநகர காவல்துறையின் மின்அஞ்சல் முகவரிக்கு (nellaicopsmc@gmail.com) அனுப்பி வைக்கலாம்.

காலக்கெடு : 22ம்தேதி காலை 10 மணி முதல் 23ம் தேதி காலை 10 மணி வரை வரும் மெயில்கள் மட்டுமே போட்டிக்கு எடுத்து கொள்ளப்படும்.

ஓவியங்கள் அனுப்பும் குழந்தைகளின் புகைப்படம், படிக்கும் வகுப்பு, பள்ளியின் விபரம் இணைக்கப்படுதல் அவசியம்.

பெற்றோர்கள் வரைந்து தருவதை தவிர்க்க வேண்டும்.

முதல் பரிசு, இரண்டாம் பரிசு, மூன்றாம் பரிசு என்று மூன்று பரிசுகள் உண்டு. 20 பேருக்கு ஆறுதல் பரிசு.
கலந்து கொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ்கள்.

ஒருவரே எத்தனை படங்கள் வேண்டுமானாலும் வரைந்து அனுப்பி வைக்கலாம்.

தலைப்பு : “கொரோனோவை வெல்வோம்”

உங்களுக்காக பணி செய்ய நாங்கள் வெளியில் இருக்கிறோம்
எங்களுக்கு உதவ நீங்கள் வீட்டில் இருந்து கொள்ளுங்கள்” என்கிற அறிவிப்பை வெளியிட்டுள்ளார் குழந்தைகளை கலந்து கொள்ளுங்கள் வெற்றி பெற வாழ்த்துகள்

செய்தியாளர் நெல்லை டேவிட் 

About Author

error: Content is protected !!