May 21, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

திருச்சி – திருவெறும்பூரில்அம்மா உணவகம் அமைத்திட மனிதநேயம் அன்பழகன் கோரிக்கை

தமிழ்நாடு மக்கள் வளர்சிக் குழு தலைவர் மனித நேயம் அன்பழகன் தமிழக முதல்வர் மற்றும் திருச்சி ஆட்சியர் ஆகியோருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில்


திருச்சி மாநகராட்சியில் திருவெறும்பூர் தாலுக்கா முக்கியமான தாலுக்காக்களுள் ஒன்று. இங்கு திருவெறும்பூர் ஒன்றிய அலுவலகம், திருவெறும்பூர் வட்ட அலுவலகம், R.T.O. அலுவலகம், மருத்துவமனை, கால்நடை மருத்துவமனை, திருவெறும்பூர் ரயில்வே நிலையம், பெரிய பஸ்நிறுத்தம், எறும்பீஸ்வரர் மலைக்கோவில், அருகில் கல்லணை, BHEL NIT. OFT போன்ற மக்கள் ஆயிரக்கணக்கில் வந்துபோகும் இடமாக உள்ளது. திருவெறும்பூர் வட்டத்தில் திருவெறும்பூர், வேங்கூர், நவல்பட்டு ஆகிய பிர்காக்களும் உள்ளன. இப்பகுதி விவசாயிகளும், தொழிலாளர்களும் நிறைந்த பகுதி ஆகும். தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் மேற்கண்ட இடங்களுக்கு பல்வேறு நோக்கங்களுக்காக காலையில் வந்து மாலையில் திரும்பும் நிலை உள்ளது. !
இங்கு வரும் மக்கள் சாதாரண நடுத்தர ஏழை, எளிய மக்கள் ஆவர். அவர்கள் தங்களது வேலைகளை கவணித்து காலை மதிய வேலைகளில் உணவருந்துவது அதிக செலவு செய்யும் நிலையில் உள்ளது.
தமிழக அரசின் சிறப்பான திட்டமான “அம்மா உணவகம்” திருவெறும்பூர் பஸ் நிறுத்தம் அருகில் உள்ள காலியாக உள்ள பழைய ஊராட்சி ஒன்றிய கட்டிடத்தில் அமைந்தால் ஆயிரக்கணக்கில் வந்து செல்லும் திருவெறும்பூர் மாநகர மற்றும் புறநகர் பகுதி மக்களுக்கு மிகுந்த உபயோகமாக இருக்கும் என்பதனை தெரிவித்து கொள்கிறோம்.!என கேட்டுகொண்டுள்ளார்

About Author

You may have missed

error: Content is protected !!